அதிமுக ஆண்டுவிழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்


By: WebDesk
Oct 17, 2020, 9:29:00 AM

Tamil News Today Live: செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொழியில் தருவதற்கான தளம் இது. அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுக.வை, எம்.ஜி.ஆர். உருவாக்கிய தினம் இன்று (அக்டோபர் 17). இன்று அ.தி.மு.க. 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி அதிமுக அலுவலகத்தில் இன்று, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்று கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் அந்தக் கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.

சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து நல்ல காலநிலை நிலவியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Live Blog

News In Tamil Live: அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tamil News Live: வெள்ளிக்கிழமை வெளியான நீட் தேர்வு முடிவுகளில், தமிழகத்தில் பெரியகுளம் அருகிலுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஜீவித்குமார், இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த சதவிகிதம், கடந்த ஆண்டைவிட அதிகம். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து, 99,610 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 8வது இடமும் பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் ஸ்ரீஜன் மட்டுமே இடம்பிடித்துள்ளார். மாநில அளவில் மாணவி மோகன பிரபா 2வது இடம் பெற்றிருக்கிறார்.

Web Title:Tamil news today live tamil nadu chennai news weather aiadmk anniversarywww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: