அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை அறிவது எப்படி?

அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை அறிவது எப்படி?


US Election 2020 Results Tamil News: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் உலகின் மிக முக்கியமான ஜனநாயக தேர்தலாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு தேர்தல், அமெரிக்கா அதன் சமீபத்திய வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத அளவு பிரிந்திருப்பதால் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. மேலும், இயற்கை பேரழிவு தரும் காலநிலை மாற்றத்திலிருந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், புதிய புவிசார் அரசியல் சக்திகள் உலக சக்தியின் சமநிலையை உயர்த்த ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் மற்றும் நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் தொற்றுநோய் அச்சுறுத்தல் உள்ளிட்டவை பொருளாதாரங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஜனநாயக சவால் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோரின் வெள்ளை மாளிகையை வெல்வதற்குத் தேவையான 270 எலெக்ட்டோரல் கல்லூரி வாக்குகளுக்கான போர்க்களம் தயார்நிலையில் உள்ளது. ஆனால், தேர்தலின் முடிவுகள் தாமதமாகிவிடக்கூடும் என்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும் தேர்தல் இரவு வரை தெளிவான வெற்றியாளர் யாருமில்லை. நீண்ட காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டப் போர் தொடரக்கூடும் என்றும் மோசமான சூழ்நிலையில், சாத்தியமான வன்முறை மற்றும் தெருக்களில் அமைதியின்மை காணப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் களத்தைப் பார்க்கும்போது, போர்க்கள மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறந்துவிடாதீர்கள். மேலும், நம் கண்முன் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் ஓர் இரவை விட நீடிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

போர்க்கள மாநிலங்கள் ஏன் முக்கியம்?

போர்க்களம் அல்லது ஸ்விங் மாநிலங்கள், ஓர் வேட்பாளரின் தலைவிதியின் திறவுகோலைக் கொண்டுள்ளன. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையில் முன்னும் பின்னுமாகப் பிணைந்திருக்கும் வரலாறு இருப்பதால் இவை ‘ஸ்விங் மாநிலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ஒரு உதாரணத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால், கேரள மாநிலத்தைக் குறிப்பிடலாம். இங்குத் தேர்தல்களில் இடது மற்றும் காங்கிரசுக்கு இடையில்தான் பெரும்பான்மை போட்டி இருக்கும்.

ஸ்விங் மாநிலங்களில் அரசியல் ரீதியாகக் கிட்டத்தட்டச் சமமாகப் பிரிக்கப்பட்ட மக்கள் தொகை உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள் பெரும்பாலும் இந்த மாநிலங்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தவிர்க்க முடியாத ஓர் வழியில் அல்லது வேறு வழியில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதனால் சில நேரங்களில் திடமான நீல (ஜனநாயக) அல்லது சிவப்பு (குடியரசுக் கட்சி) மாநிலங்களைத் தவிர்க்கிறார்கள். ட்ரம்ப் மற்றும் பிடன் இருவரும் தங்கள் பிரச்சாரங்களின் போது இந்த மாநிலங்களைக் குறிவைத்தனர்.

US election 2020 results donald trump vs joe biden tamil news US election 2020 Electorial College

அமெரிக்கர்கள் நேரடியாக ஜனாதிபதிக்கு வாக்களிக்க மாட்டார்கள். தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களை முதலில் தேர்வு செய்து, பின்னர் அவர்கள் டிசம்பரில் சந்தித்து தங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் எவ்வாறு வாக்களித்தனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இறுதி வாக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் கல்லூரி வாக்குகளின் எண்ணிக்கை அதன் மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. மொத்தம் 538 தேர்தல் கல்லூரி வாக்குகள் உள்ளன. வெள்ளை மாளிகையில் நுழைவதற்கு ஒரு வேட்பாளருக்குக் குறைந்தபட்சம் 270 வாக்குகள் தேவை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், 10-12 மாநிலங்களைப் போர்க்களங்களாக ஆய்வாளர்கள் அடையாளம் காண்கின்றனர். நவம்பர் 3-ம் தேதி தேர்தலுக்கு, இவற்றில் ஆறு இடங்களில் கடுமையான போர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரிசோனா (11 தேர்தல் கல்லூரி வாக்குகள்), ஃப்ளோரிடா (29), மிச்சிகன் (16), பென்சில்வேனியா (20), மற்றும் விஸ்கான்சின் (10) ஆகியவற்றை முதன்மையாக அரசியல் அறிக்கை அடையாளம் காட்டுகிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் வட கரோலினாவையும் (15 தேர்தல் கல்லூரி வாக்குகள்) இதோடு இணைக்கிறார்கள்.

US election 2020 results donald trump vs joe biden tamil news US election 2020 Swing states poll

இதில் மிகப்பெரிய ஸ்விங் மாநிலம் ஃப்ளோரிடாதான். இது, அமெரிக்காவில் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுள்ள மாநிலங்களில் ஒன்று. 1996-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை பில் கிளின்டனும், 2000 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் குடியரசுக் கட்சியை ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷும், 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியை பராக் ஒபாமாவும், 2016-ல் குடியரசுக் கட்சியை டொனால்ட் டிரம்ப்பும் வழி நடத்தினர். இந்த முக்கிய கட்சிகளுக்கிடையில் தான் ஃப்ளோரிடா ஊசலாடுகிறது.

ஹிலாரி கிளின்டனை வீழ்த்தியதில், ட்ரம்ப் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய நாடுகளையும் வென்றார். இந்த நேரத்தில், ஆய்வாளர்கள் பென்சில்வேனியா ஒரு “முனைப்புள்ளி” என்று கருதுகின்றனர்.

பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மூன்று போர்க்கள மாநிலங்களில், தேர்தல் நாள் வரை ஆரம்ப வாக்குகளை எண்ணத் தொடங்காது. அதாவது இறுதி முடிவுகள் மற்றும் கணிப்புகள் தேர்தல் நடைபெற்ற இரவில் நடைபெறாது. ஆனால், வட கரோலினா மற்றும் அரிசோனாவில் வாக்குச் சீட்டுகளை எண்ணத் தொடங்கிவிடுவார்கள் . இந்த மாநிலங்களை ‘எலெக்ஷன் நைட்’ என்று அழைக்கிறார்கள்.

தேர்தலைச் சுற்றி ஏன் இத்தகைய நிச்சயமற்ற தன்மை இருக்கிறது?

231,000 அமெரிக்கர்களைக் கொன்ற தொற்றுநோய்க்கு நடுவே தேர்தல் நடைபெறுவதும், வாக்களிப்பு நடத்தை மற்றும் தேர்தலின் சூழலை அடிப்படையில் மாற்றியமைத்ததும் பெரும்பாலான நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகின்றன.

திங்கள் இரவு வரை இந்தியாவிலிருந்து 96 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், மெயில்-இன் வாக்குகள் மற்றும் முற்காலத்திய வாக்களிப்பு மூலம் வாக்களித்துள்ளனர் (நவம்பர் 3 ம் தேதி கூட்டத்தைத் தவிர்க்க). அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகளைப் பெறுவதற்கும், செயலாக்குவதற்கும், எண்ணுவதற்கும் எடுக்கும் நேரம் மற்றும் பல போர்க்கள மாநிலங்களில் கணிப்புகள் சாத்தியமில்லை என்ற உண்மையின் காரணமாக, தேர்தல் இரவில் சரியான வெற்றியாளர் யார் என்பதில் தெளிவிருக்காது. பென்சில்வேனியா, மிச்சிகன் போன்ற ஸ்விங் மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் எண்ணிக்கையை முடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மொத்தமாக 270-க்கு போட்டியிட்டு தனிப்பட்ட மாநிலங்களில் வாக்குகளை எண்ணுவது பொருத்தமற்றது. இது தேர்தல் இரவில் முடிவைத் தெரிந்துகொள்ள எளிதாக்கும் என்றாலும் நிச்சயம் நடைமுறையில் நடக்காது மற்றும் ட்ரம்ப் இந்த முடிவை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே ஓர் நெருக்கமான அழைப்பின் போது போராட ட்ரம்ப் கட்சி சட்டக் குழுக்களைத் தயாரித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய பங்கை வகிக்க விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். நீதிபதி ஏமி கோனி பாரெட்டை உச்சநீதிமன்றத்தில் அவசரமாக உறுதிப்படுத்தியது முதல் தேர்தல் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு தெளிவான பழமைவாத சார்புடைய முழுமையான ஒன்பது நீதி மன்றத்தை இலக்காகக் கொண்டது வரையிலான நடவடிக்கைகளால், தனக்கு ஆதரவாகத் தீர்ப்பளிப்பார் என்று ட்ரம்ப் நம்புகிறார்.

தேர்தல் இரவு, நாட்கள் மற்றும் வாரங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டால், வழகைத் தொடர்ந்து நிலைமை குழப்பமானதாக மாறக்கூடும். மேலும், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அச்சங்கள் வெளிப்படும்.

ஓர் ஜனாதிபதி, தேர்தலை ஒப்புக் கொள்ள மறுத்ததற்கான எந்தவொரு முன்னுதாரணமும் இதுவரை இல்லை. ஆனால், ட்ரம்ப் வேறுபட்டவர். அவர் தோற்றால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வார் என்று ஒருபோதும் அவர் உறுதிப்படுத்தவில்லை. போட்டி இறுக்கமாக இருக்கக்கூடும், அதிலும் ட்ரம்ப் தோற்றால் நிலைமை அமைதியாக இருக்காது என்பதால்தான் பலரும் அதிகாரப் பரிமாற்றத்திற்கு அஞ்சுகின்றனர்.

“ copy rights NavaIndia”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: