
USA reports 70 thousand new corona cases for the second time : உலக அளவில் கொரோனாவுக்கு அதிக அளவில் ஆளானவர்கள் மற்றும் பலியானவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டிய நிலையில் புதிதாக உறுதி செய்யப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்றுக் கலக்கத்தை தருகிறது.
மேலும் படிக்க : ”கொரோனா நெகட்டிவ்” போலியான முடிவுகளை தந்த டாக்டர் கைது!
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் நபர்கள் என்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனாவிற்கு 37,70,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,42,065 என்ற புதிய நிலையை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் மற்றும் ஃப்ளோரிடா போன்ற மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பிற்காக கனடா மற்றும் மெக்கோவுடனான சர்வதேச எல்லையை மூடியது அமெரிக்கா. இந்த எல்லை தடுப்பு ஆகஸ்ட் 20ம் தேதி வரை தொடரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Usa reports 70 thousand new corona cases for the second time
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center