அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா; திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் பாதிப்பு


By: WebDesk
Updated: August 18, 2020, 09:08:25 PM

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனை வைரஸ் தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூயமைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் காவலர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதே நேரத்தில், தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் வெண்டிலேட்டர் மூலம் நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியான நிலையில், வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த் தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Transport minister mr vijayabaskar tested covid 19 positive dmk mla senthil balaji tested coronaviurs positive





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: