அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் நாடகம் ; முக்கிய கதாப்பாத்திரத்தில் பாஜக எம்.பிக்கள்!


Dipanita Nath

Actor-MPs in key roles, Ayodhya to host grand Ramlila to be screened on TV, online :  ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சராயு நதிக்கரையோரத்தில் ராமாயணம் நாடகத்திற்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 17 முதல் 25 தேதி வரை சமூக வலைதளங்கள், டிவி, மற்றும் யுட்யூப் வாயிலாக இந்நிகழ்வுகளை மக்கள் காண இயலும்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்களுக்கு, நேரில் சென்று காண அனுமதி இல்லை. அனைத்து காட்சிகளும் லக்‌ஷ்மன் குயிலா இடத்தில் படமாக்கப்பட்டு ஒளிபரப்பப்படும். மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்புடன் இந்த நிகழ்வுகளை காணலாம் என்கிறார் மேரி மா ஃபவுண்டேசனின் நிறுவனர் சுபாஷ் மாலிக். இந்த நிகழ்வில் பாஜக எம்.பி. பர்வேஷ் ஷாஹிப் சிங் முக்கிய பங்காற்றுகிறார் என்று கூறியுள்ளார்.

இந்த ராம்லீலாவில் டெல்லியின் வடகிழக்கு பாஜக எம்.பி மனோஜ் திவாரி அங்கதாகவும், கோரக்பூர் எம்.பி. மற்றும் போஜ்பூரி நடிகருமான ரவி கிஷான் பரதனாகவும், விந்து தாரா சிங் அனுமனாகவும், ராஜா முராட் அஹிராவனாகவும், அஸ்ரானி நாரத முனிவராகவும் நடிக்க உள்ளனர்.

To read this article in English

ஷபாஜ்கான் ராவணனாக நடிக்க உள்ளார். ரித்து ஷிவ்பூரி கைகேயியாகவும், ராகேஷ் பேடி விபிஷனாகவும் நடிக்க உள்ளனர். ராம் மற்றும் சீதாவாக சோனு தாகர் மற்றும் கவிதா ஜோஷி ஆகியோர் நடிக்க உள்ளனர். சீதையாக நடிப்பது என்னுடைய பாக்கியம் என்று நினைக்கின்றேன். என்னுடைய வாழ்வில் மிகவும் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். ராமர் கோவில் அமைகின்ற இடத்திலேயே ராம்லீலா நடைபெற இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜோஷி குறியுள்ளான்ர். ஹர்யான்வி திரைப்படத்துறையில் 25க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார் கவிதா.

தாகர் மற்றும் கவிதா இந்த கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதால் மிகவும் எளிமையான உணவினை உட்கொண்டு தரையில் தூங்குகின்றனர். ராமன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த மரியாத புருஷோத்தம். அவருடைய வாழ்வை புரிந்து கொள்ளவே நான் இவ்வாறு முயற்சிக்கின்றேன் என்று தாகர் கூறியுள்ளார்.   மேரி மா ஃபவுண்டேஷன் 2016ம் ஆண்டு துவங்கப்பட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ராம்லீலாக்களை நடத்தியுள்ளனர். அயோத்தியில் நடைபெற இருக்கும் ராம்லீலா டெல்லியில் பணியாற்றிய  கலைஞர்களின் அனுபவத்தால் அமைய இருக்கிறது என்று கூறியுள்ளார் மாலிக்.

திவாரி பரசுராமாக 2019ம் ஆண்டிலும் அங்கதாக 2018ம் ஆண்டிலும் டெல்லி ராம்லீலாவில் நடித்தனர். கிஷான் பரசுராமா, பீஷ்மா, கர்ணா, துரோணோச்சார்யா மற்றும் அங்கத்தாக பல்வேறு முறை நடித்துள்ளார். அயோத்தியில் நடைபெற இருக்கும் இந்நிகழ்விற்கான பட்கெட் 4 கோடி ரூபாய் ஆகும். 90 அடிக்கு 25 அடி என்ற ரீதியில் பெரிய ஸ்டேஜ் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வெளிப்புற காட்சிகள் அனைத்தும் எல்.இ.டி திரையில் பிரதிபலிக்கும். இம்முறை ஒலி மற்றும் ஒளிக்கு முக்கியத்துவம் தர உள்ளோம் என்று கூறியுள்ளார். பொதுவாக ராம்லீலா பார்க்கும் போது வசனங்கள் சரியாக கேட்காது என்பது தான் பெரிய குறையாக  இருக்கும். இம்முறை அதனை சரி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தசரா பண்டிகைகளின் ஒரு பகுதியாக நடைபெற இருக்கும் இந்த ராம்லீலாவில் ராவணனுடன் ராமர் போர் புரிந்து தீயதை நன்மை வெற்றிக் கொள்ளும் நிகழ்வுகளை காட்சியாக்கும். அயோத்தியில் இதனை நடத்த வேண்டும் என்று நான் கொரோனா ஊரடங்கு நாட்களின் போது தான் சிந்தித்தேன் என்று மாலிக் அறிவித்துள்ளார். இந்த நிகழ்விற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்காக முயற்சித்து வருகிறார் மாலிக். இது குறித்து ஏ.டி.எம். சிட்டியின் டாக்டர் வைபர் ஷர்மா கூறுகையில் ராம்லீலா பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அயோத்தியில் ராம்லீலா நடத்தும் நபர்கள் பொருளாதார ரீதியாக பெரும் துயரத்தை அடைந்துள்ளனர். ராம்லீலா என்பது உள்ளூர் காரர்களை பொறுத்தவரை பழங்கால பாரம்பரியம். ராம்லீலா காலத்தில் தான் அவர்களுக்கு வருமானமே இருக்கும் என்று மனிஷ் தாஸ் தெரிவிக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர் என்று கூறிய போது ஒளிபரப்பப்பட்டால் நிச்சயம் நான் பார்க்கின்றேன் என்று கூறிய ஆவத் ஆதர்ஷ் ராம்லீலா மண்டலின் ஒருங்கிணைப்பாளர், அரசு பாரம்பரியமாக இந்நிகழ்வை நடத்தும் மக்களுக்காகவும் உதவியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: