ஆளில்லா செவ்வாய் கிரக பயணம் – சீறிப் பாய்ந்த சீன விண்கலம்! நோக்கம் என்ன?

சீனா, வியாழக்கிழமை செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. முதன்முதலாக வேற்று கிரகத்திற்கு தனது சொந்த தயாரிப்பில் முதல் ஆளில்லா விண்கலத்தை சீனா ஏவியுள்ளது. இதன்மூலம், விண்வெளியில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான முயற்சி மற்றும் அதன் தொழில்நுட்ப வலிமை மற்றும் அதன் லட்சியத்தின் காட்சியாக இச்சம்பம் பார்க்கப்படுகிறது. சீனாவின் மிகப்பெரிய கேரியர் ராக்கெட், Long March 5 Y-4, மதியம் 12:41 மணிக்கு. (0441 GMT) தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி வெளியீட்டு மையத்திலிருந்து சீறிப் பாய்ந்தது. இந்த ஆய்வு பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு 90 நாட்களுக்கு கிரகத்தை ஆராய ஒரு ரோவரை களமிறக்க முயற்சிக்கும்.

இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கவிதையின் பெயரான Tianwen-1 அல்லது “Questions to Heaven” பெயர் தான் இந்த ரோவருக்கு வைக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக இறங்கினால், தனது முதல் முயற்சியிலேயே ரோவரை தரையிறக்கும் முதல் நாடாக சீனா உருமாறும்.

விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்குவதால் சவால்கள் இருக்கும் என்று இந்த மிஷனின் செய்தித் தொடர்பாளர் லியு டோங்ஜி தெரிவித்தார். “செவ்வாய் கிரகத்திற்கு அருகே வரும்போது, decelerate (வேகத்தை குறைத்தல்) என்பது மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார். “deceleration process சரியாக இல்லாவிட்டால், அல்லது துல்லியமாக செயல்பாடு இல்லாவிட்டால், இந்த ஆய்வு செவ்வாய் கிரகத்தால்நடைபெறாது,” என்று அவர் கூறினார்.

6 ஜிபி ரேம்… 512 ஜிபி வரை மெமரி… பட்டையைக் கிளப்பும் Samsung M31S ரிலீஸ் எப்போது?

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுமார் இரண்டரை மாதங்கள் சுற்றிவரும் என்றும் அதன் வளிமண்டலத்தில் நுழைந்து மென்மையான தரையிறங்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்க்கும் என்றும் லியு கூறினார்.

செவ்வாய் கிரகத்திற்கு அருகே வரும்போது, decelerate (வேகத்தை குறைத்தல்) என்பது மிகவும் முக்கியமானது

“நுழைதல், வேகத்தை குறைத்தல் மற்றும் தரையிறக்கம் (EDL) ஆகியவை மிகவும் கடினமான செயல்முறை. சீனாவின் ஈ.டி.எல் செயல்முறை இன்னும் வெற்றிகரமாக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால்,விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்க முடியும்” என்று லியு கூறினார்.

எட்டு விண்கலங்கள் – அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகின்றன அல்லது அதன் மேற்பரப்பில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திங்களன்று செவ்வாய் கிரகத்திற்கு ஒரு பயணத்தைத் தொடங்கியது, இது கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ஒரு திட்டமாகும்.

தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) மூலம், செவ்வாய் கிரகத்திற்கு மிகப் பெரிய, கனமான, அட்வான்ஸ் டெக்னாலஜி ரோவரை வரும் மாதங்களில் அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வந்தாச்சு Oneplus Nord: இதை வாங்கலாமா? முந்தைய மாடலைவிட என்ன ஸ்பெஷல்?

தற்போது அனுப்பப்பட்டுள்ள சீனாவின் விண்கலம் வளிமண்டலத்தையும் மேற்பரப்பையும் கண்காணிக்க பல அறிவியல் கருவிகளைக் கொண்டு செல்கிறது. செவ்வாயில் நீர் மற்றும் பனியின் அறிகுறிகளைத் தேடும்.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுமார் இரண்டரை மாதங்கள் சுற்றிவரும்

சீனா முன்னர் 2011 இல் ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை மேற்கொண்டது, ஆனால் ரஷ்ய விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறத் தவறி பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

செவ்வாய் கிரகத்திற்கான நான்காவது திட்டமிடப்பட்ட ஏவுதல், ஐரோப்பிய ஒன்றிய-ரஷ்ய எக்ஸோமார்ஸ், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: