ஆ.ராசா, பொன்முடிக்கு திமுக.வில் புதிய பதவி – பொதுக்குழுவில் அறிவிப்பு


சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் அறிவிக்கப்பட்டனர். அதே நேரத்தில், திமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த ஆ.ராசாவுக்கும் திமுகவின் மூத்த தலைவரான பொன்முடிக்கும் கட்சியில் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன், மார்ச் மாதம் முதுமையால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலாமானார். அவருடைய மறைவை அடுத்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, அந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்காக திமுகவில் பொருளாளர் பதவி வகித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கடந்த வாரம், திமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, செப்டம்பர் 9ம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதில் பொதுச்செயலாளர், பொருளாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, திமுகவில் பட்டியல் இனத்தவருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதில்லை என்று கட்சிக்கும் உள்ளேயும் வெளியேயும் விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில், கட்சியில் மற்றொரு மூத்த தலைவரான பொன்முடியும் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இப்படி பல அழுத்தங்களுக்கு மத்தியில் திமுக பொதுக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், திமுகவின் 4வது பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதே போல, டி.ஆர்.பாலு திமுகவின் 8வது பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, திமுகவின் துணை பொதுச் செயலாளராக ஆர்.ராசாவும் பொன்முடியும் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், பொதுக்குழுவில், உயிரிழந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு கண்டனம் தெரிவிகப்பட்டது. மேலும், அதிமுக ஊழலுக்கு மத்திய அரசு பாதுகாவலராக இருப்பதாகக் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகளில் தோல்வியடைந்துவிட்டதாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக 2021ல் சூளுரை ஏற்போம் உள்ளிட்ட 12 திர்மாணங்க நிறைவேற்றப்பட்டன.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்குள் பல அழுத்தங்களுக்கு மத்தியில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: