இது இருண்ட ஆட்சியா? மு.க.ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ பதில்


News In Tamil Live : புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மத்திய வங்கக்கடலில் உருவாக இருப்பதனால், அடுத்த இரண்டு நாள்களுக்கு, தமிழகம், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி நீடித்து இருக்கவேண்டும் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், இந்த நிலை இன்னும் ஆறு மாதங்கள் வரைதான். அதன்பிறகு காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சியும் மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ ஏன் தொட்டுபார்க்கவோ முடியாது’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேண்டமிக் காலகட்டத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகள், கடந்த மாதம் ஆன்லைனில் நடைபெற்றது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘சாஃப்ட்வேர்’ பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தொழில்நுட்ப கோளாறால் சரியாக தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பினையும் அளித்தது பல்கலைக்கழகம்.

விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது ஆன்லைனில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. www.annauniv.edu என்ற தளத்தில் சென்று முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகளில், அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

22-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த பல்வேறு துறை அதிகாரிகளோடு முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுவதால், கடந்த ஒன்றரை மாதத்தில் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 1 அன்று தான் சிகிச்சை பெறுபவர்களின்  எண்ணிக்கை 8 லட்சத்திற்கு குறைவாக (7,85,996) இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 62,212 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamilwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: