இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் – கமல்ஹாசன் ட்வீட்


By: WebDesk
Aug 22, 2020, 11:51:13 AM

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

 

 

கொரோனா காலகட்டத்தில் பொதுத்தேர்தல் / இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” முதல் முறையாக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெப்பாசிட் காப்புத்தொகையை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளரோடு செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவின் போது அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது.  வேட்புமனுவையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்த பிறகு பூர்த்தி செய்தவற்றைப் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்ட ஆர்.ஓ-விடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆணையம் உருவாக்கியுள்ளது வேட்பாளருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு அவருடன் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் / மாநிலம் ஆகியவை வழங்கியுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த வழிகாட்டுதலின் படி பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். தேர்தலின் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு முகக்கவசம், கிருமிநாசினி, தெர்மல் வெப்பமானி, கையுறைகள், முகக்கவசம், முழு உடல் கவசம் ஆகியன பயன்படுத்தப்பட வேண்டும். வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கும் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கும் வாக்காளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today Live Updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Today Live Updates : ரோஹித் சர்மா, மாரியப்பன் டி (பாரா அத்லெட்டிக்), மாணிக்காபாத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ்(மல்யுத்தம்), ராணி (ஹாக்கி) ஆகிய விளையாட்டு வீரர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

 

Web Title:Tamil news today live updates vinayagar chathurthi coronavirus case tamilnadu politics religious activitieswww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: