இந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா? ஸ்டாலின் பட்டியல்

இந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா? ஸ்டாலின் பட்டியல்


By: WebDesk
Updated: December 1, 2020, 10:59:44 PM

இந்து மதத்துக்கு திமுக செய்த பல்வேறு பணிகள் குறித்து எதுவுமே தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்ற சிலர் தங்களையும் – தங்கள் கட்சியையும் காப்பாற்ற இந்துமதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை இந்து மதத்துக்கு எதிரான கட்சிகள் என்று விமர்சித்துவருகின்றனர். பாஜகவினரின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக, திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மத்திய மாவட்ட தொண்டர்கள் இடையே காணொளி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்து மதத்துக்கு திமுக செய்த பணிகளை பட்டியலிட்டதோடு சிலர் தங்கள் கட்சியையும் காப்பாற்ற இந்துமதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோவை திமுகவினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “கருணாநிதி முதல்வராக இருந்த ஒவ்வொரு முறையும் தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு சென்று நிறுத்தினார். அதனால்தான் அவர் ஒருமுறை அல்ல 5 முறை ஆட்சியைக் கைப்பற்றினார். இன்றைக்கு திமுகவை நேரடியாக வீழ்த்த முடியாதவர்கள், பல்வேறு மறைமுக அஸ்திரங்களை நம்மீது எய்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு சதி திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளை காரணம் காட்டி அதனை தூண்டிவிட்டு திமுகவை வீழ்த்திவிடலாம் என்று இருக்கிறார்கள். இன்றைக்கு ஆன்மீகத்தைக் காக்க அவதாரம் எடுத்ததாக யார்யோரோ நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் கோயில்களை, அறநிலையத்துறையைக் காத்த ஆட்சி கருணாநிதி தலைமையில் இருந்த திமுக ஆட்சி. அவர் ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியவர் மட்டுமல்ல. இந்த நெல்லையப்பர் கோயில் திருப்பணிகளை செய்தவரும் முதல்வராக இருந்த கருணாநிதிதான்.

இப்படி இந்துமதத்துக்கு திமுக செய்த பல்வேறு பணிகள் குறித்து எதுவுமே தெரியாமல் ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்ற சிலர்’ தங்களையும் – தங்கள் கட்சியையும் காப்பாற்ற இந்துமதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin listed dmk did for hindu religious and slams some used as tool hindu religious

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: