இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏன் நமக்கு கை கொடுக்கவில்லை?

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏன் நமக்கு கை கொடுக்கவில்லை?


Why has the Northeast monsoon remained subdued this year? :  வடகிழக்கு பருவமழை என்றால் என்ன? அது ஏன் நமக்கு முக்கியம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

இந்தியா இரண்டு பருவகாலங்களில் மழையை பெறுகிறது. வருடாந்திர மழைப் பொழிவில் 75% மழையை நாம் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பெறுகின்றோம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய பருவமான இது பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே மழைப் பொழிவை தருகிறது.

வடகிழக்கு பருவமழையை நாம் குளிர்கால பருவமழை என்றும் அழைப்போம்.தமிழகம், புதுவை, காரைக்கால், ஏனாம், ஆந்திர கடற்கரை பகுதிகள், கேரளா, வடக்கு உள் கர்நாடகா, மாஹே, மற்றும் லட்சத்தீவுகள் இம்மழையால் நன்மை அடைகின்றன. சில தெற்காசிய நாடுகளான மாலத்தீவுகள், இலங்கை, மியான்மரிலும் அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் மழைப் பொழிவு இருக்கும்.

மேலும் படிக்க : நிவர் புயல் : 2 ஆண்டுகளில் மற்றொரு புயலை தமிழகம் எப்படி எதிர் கொள்கிறது?

இந்த மாதங்களில் தான் தமிழகத்தின் வருடாந்திர மழைப்பொழிவில் (943.7mm) 48% (447.4mm) மழைப்பொழிவை பெறுகிறது. மாநிலத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் நீர் சேமிப்பு மேலாண்மை இந்த பருவமழையை நம்பியே உள்ளது. அக்டோபர் மத்தியில் நாட்டில் இருந்து முழுமையாக தென்மேற்கு பருவமழை நீங்கிய நிலையில் காற்று வீசும் திசை தெற்கு – மேற்கில் இருந்து வடக்கு – கிழக்காக மாறும். தென்மேற்கு பருவமழை முடிந்த பிறகு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடக்கு இந்திய பெருங்கடல் (அரபிக் கடல், வங்கக் கடல்) பகுதிகளில் புயல் உருவாகும்.

தாழ்வு அழுத்தம், தாழ்வு மண்டலம், மற்றும் புயல்கள் உருவாக இந்த காற்றின் திசை காரணமாக உள்ளது. சூறாவளிகள் குறித்த சரியான நேரத்தில் வழங்கப்படும் தகவல்கள் அரசாங்கங்களுக்கும் பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கும் தற்செயலைத் திட்டமிட முக்கியம்.

இந்த ஆண்டில் இப்போது வரை இந்த பருவமழை எவ்வாறு இருக்கிறது?

தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் வழக்கத்திற்கும் குறைவாகவே இந்த ஆண்டு, இந்த பருவத்தில் மழை பெய்துள்ளது என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். அக்டோபர் 28ம் தேதி அன்று தான் தென்மேற்கு பருவமழை இந்திய நிலத்தில் இருந்து முழுமையாக வெளியேறியது. சரியாக 14 நாட்கள் தாமதமாக. அதே நாளில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் தீபகற்ப இந்தியா முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியதாக அறிவித்தது. ஆனால் நவம்பர் 10ம் தேதி வரை பருவமழை சராசரிக்கும் குறைவாகவே இருந்தது.

அக்டோபர் 1 முதல் நவம்பர் 23 வரையிலான ஐஎம்டியின் தரவு பதிவுகள் லட்சத்தீவு (- 42 சதவீதம்), புதுச்சேரி (- 39 சதவீதம்), தமிழ்நாடு (- 25 சதவீதம்) மற்றும் கேரளா (-30 சதவீதம்) மாநிலங்களில் சாதாரண மழையை விடக் குறைவாகவே மழை பதிவாகியுள்ளதை காட்டுகிறது. நவம்பர் 23ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

மேலும் படிக்க : தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த புயல்கள் ஒரு பார்வை!

இந்த பருவத்தில் மழை பற்றாக்குறைக்கு காரணம் என்ன?

வானிலை ஆராய்ச்சியாளர்கள் இதனை லா நினா நிலைமைகளுடன் ஒப்பிட்டுள்ளனர். எல் நினோவின் (ஸ்பானிஷ் மொழியில் சிறுவன் என்று பொருள்) போது கிழக்கு மற்றும் மத்திய பசுபிக் பெருங்கடலின் மேற்புறம் அசாதாரண வெப்பநிலை இருக்கும். லா நினா (ஸ்பானிஷ் மொழியில் சிறுமி) என்பது பெருங்கடல் மேற்பரப்பில் அசாதாரண குளிர் நிலவுவதை குறிக்கும்.

இரண்டு நிகழ்வுகளையும் சேர்த்து El Niño Southern Oscillation (ENSO) என்று பெயரிட்டுள்ளனர். இவை பெரிய அளவிலான கடல் நிகழ்வுகளாகும், அவை உலக வானிலை – காற்று, வெப்பநிலை மற்றும் மழையை பாதிக்கின்றன. உலகளவில் வறட்சி, வெள்ளம், வெப்பம் மற்றும் குளிர் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளைத் தூண்டும் திறன் இதற்கு உள்ளது.

ஒவ்வொரு சுழற்சியும் 9 முதல் 12 மாதங்களுக்கு நீடிக்கும், சில நேரங்களில் 18 மாதங்கள் வரை நீட்டிக்கலாம். மேலும் ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழும்.  இந்த பூமத்திய ரேகைப் பகுதியுடன் நினோ பகுதிகள் என அழைக்கப்படும் நான்கு வெவ்வேறு பகுதிகளுக்கான கடல் மேற்பரப்பு வெப்பநிலையை வானிலை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். வெப்பநிலையைப் பொறுத்து, அவை எல் நினோ, ENSO நடுநிலை கட்டம் அல்லது லா நினா என்று அழைக்கின்றனர்.

மேலும் படிக்க : சென்னையில் அதிகப்படியாக 9 செ.மீ மழைப் பதிவு – வானிலை ஆய்வு மையம்

லா நினா வடகிழக்கு பருவமழையுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது?

லா நினா தென்மேற்கு பருவமழையுடன் தொடர்புடைய மழைப்பொழிவை மேம்படுத்துகிறது. இது வடகிழக்கு பருவமழையுடன் தொடர்புடைய மழைப் பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புனேவின் ஐஎம்டியின் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகளின் தலைவர் டாக்டர் டி சிவானந்த பாய் கூறுகையில், லா நினா ஆண்டுகளில், வங்காள விரிகுடாவில் உருவாகும் சினோப்டிக் அமைப்புகள் – குறைந்த அழுத்தம் அல்லது சூறாவளிகள் – அவற்றின் இயல்பான நிலைக்கு வடக்கே கணிசமாக இருக்கின்றன. “மேலும், மேற்கு நோக்கி நகர்வதற்கு பதிலாக, இந்த அமைப்புகள் மீண்டும் சுழற்சி முறையில் இங்கே வருகின்றன. இயல்பான நிலைக்கு வடக்கே அந்த புயல்கள் சொல்லும்போது, தமிழகம் போன்ற தெற்குப் பகுதிகளில் அதிக மழை பெய்யாது ”என்று அவர் கூறுகிறார். இந்த பருவத்தில் இலங்கையிலும் கூட குறைவான மழைப் பொழிவே ஏற்பட்டது.

இடைக்கால வெப்பமண்டல கன்வெக்டிவ் மண்டலத்தின் ( Inter Tropical Convective Zone (ITCZ)) தற்போதைய நிலையும் கூட இந்த பருவகாலத்தில் மோசமான மழைக்கு காரணமாக அமைந்தது. ITCZ என்பது குறைந்த அழுத்த பெல்ட் ஆகும். இதன் வடக்கு மற்றும் தெற்கு நோக்கி பூமத்திய ரேகை இயக்கங்கள் வெப்பமண்டலத்தில் மழைப்பொழிவை தீர்மானிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மீதமுள்ள வடகிழக்கு பருவமழைக்கான மழை கணிப்பு என்ன?

நவம்பர் 10 முதல், தெற்கு தீபகற்பத்தில் மழை பெய்தது; இருப்பினும், ஒட்டுமொத்த மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. லா நினா நிலைமைகள் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சில வானிலை மாதிரிகள் மார்ச் வரை கூட நீடிக்கும் என்று கணித்துள்ளது. இதன் விளைவாக, டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைவதற்குள் தெற்கு தீபகற்ப பகுதியில் குறைவான மழைப் பொழிவே பதிவாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: