இந்த டெக்னிக் கரோனா வைரசை கொல்லுமா? சாமியாரின் செயலை கலாய்த்த குஷ்பூ.


kushboo

தென்னிந்திய சினிமா உலகில் 80,90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வந்தவர் நடிகை குஷ்பு . இவர் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பின் நடிகை குஷ்பு அவர்கள் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம்16’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். மேலும், இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவருடைய அழகிற்கும், நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை என்று சொல்லலாம்.

இவர் பல முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் சினிமா திரை உலகில் மிக பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா,ஆனந்திதா என்ற இரண்டு பெண்கள் உள்ளார்கள். தற்போது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : உடல் தெரியும் அளவிற்கு படு மோசமான ஆடையில் கிரண். வைரலாகும் இன்ஸ்டாகிராம் க்ளிக்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை குஷ்பூ அவர்கள் சோசியல் மீடியாவில் கரோனா வைரஸ் குறித்து கிண்டலாக கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார். இதனால் நெட்டிசன்கள் பயங்கரமாக குஷ்பூவை விமர்சித்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கரோனா வைரஸினால் 30,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது.

தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் சீனாவுடன் கொண்ட போக்குவரத்து தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள். மேலும், உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கரோனா வைரஸ் காரணமாக 717 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உலக வெப்பமயமாதலை தடுக்க உலக உருண்டை மீது தண்ணீர் ஊற்றி காவி உடையில் இருக்கும் நபர் ஒருவர் செய்த செயலை பகிர்ந்து, இந்த டெக்னிக் கரோனா வைரசை கொல்லுமா? என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். உலகமேபயத்திலும்,பீதியிலும் இருக்கும் போது நடிகை குஷ்புவின் இந்த மாதிரியான கருத்து பதிவு குறித்து என்ன நீங்கள் நினைக்கிறீர்கள்.www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: