ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கொரோனா அறிகுறி; மருத்துவமனையில் அனுமதி

ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கொரோனா அறிகுறி; மருத்துவமனையில் அனுமதி


By: WebDesk
November 6, 2020, 7:19:15 PM

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2,500க்குள் பதிவாகி வருகிறது. தமிழக அரசு தீவிரமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த, 7 மாதங்களில் மருத்துவர்கள், காவல்துறையினர், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அம்ரீஷ்வர் பிரதாப் சாஹிக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி ஏற்பட்டதையடுத்து அவர் இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai high court chief justice ap sahi shows covid symptoms admitted in hospital





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: