ஒரு ‘சேஞ்ச்’-க்கு இதைச் செய்யுங்க: சத்தான ராகி சேமியா இட்லி

ஒரு ‘சேஞ்ச்’-க்கு இதைச் செய்யுங்க: சத்தான ராகி சேமியா இட்லி


Ragi Idli Recipe In Tamil, Ragi Idli Tamil Video: இட்லி விருப்பமான உணவுதான். அதற்காக அரைத்த மாவையே அரைத்து, அதே இட்லியைத்தான் செய்ய வேண்டுமா என்ன? கொஞ்சம் சத்தாக, டேஸ்டியாக செய்தால், இட்லியும்கூட ‘போர்’அடிக்காது. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ராகி சேமியா இட்லி அந்த வகைதான். ராகி சேமியா, சாதாரணமாக நாம் கடைகளில் வாங்கும் ஒரு பொருள்தான். அதைப் பயன்படுத்தி சத்தான சுவையான இட்லி எப்படி தயார் செய்வது என இங்கு பார்க்கலாம்.

Ragi Idli Tamil Video: ராகி சேமியா இட்லி

ராகி சேமியா இட்லி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: ராகி சேமியா – 200 கிராம், நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பட்டாணி அனைத்தும் சேர்த்து – 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 4, புதினா,
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய இஞ்சி – 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/4 கப், நெய் – 2 டீ ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – சிறிது, மாங்காய் பொடி – 1 டீ ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

ராகி சேமியா இட்லி எப்படிச் செய்வது?

முதலில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்கறிகளை வதக்கி, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், ராகி சேமியா கலந்து இறக்கவும்.
இத்துடன் அரைத்த உளுந்தம் பருப்பு கலவை, மாங்காய் பொடி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால், ராகி சேமியா இட்லி தயார்.

ராகி உணவு சத்தானது, ருசியானதும்கூட. எனவே ராகி சேமியா இட்லி சமைத்து வித்தியாச உணர்வைப் பெறுங்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்குm, உடல் எடை குறைப்புக்கும் உகந்ததும்கூட!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: