
Master Teaser Today Live: தமிழ் சினிமா உலகின் இன்றைய ஆகப் பெரிய எதிர்பார்ப்பு மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் இது. இயக்கம், லோகேஷ் கனகராஜ். கொரோனா பெருந்தொற்று காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. எனினும் தனது ரசிகர்கள் திருப்தியே முக்கியம் என நினைக்கும் விஜய் நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
எனினும் தீபாவளித் திருநாளில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே தீபாவளி தினத்தன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் ரிலீஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதையே ஒரு திரைப்பட ரிலீஸ் அளவுக்கு சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
.”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
Thalapathi Vijay Master Tamil Movie Teaser release: விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
Thalapathi Vijay Master Tamil Movie Teaser release: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்களைப் பார்ப்பது மிகவும் அரிதானது. அதிலும் இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய், விஜய் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
ஏப்ரல் 9ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம், கொரோனா தொற்று காரணமாக 2021-ல்தான் வெளியாகப் போகிறது. மேலும், விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘பிகில்’ படம் கடந்த தீபாவளிக்குத்தான் வந்தது. ஒரு வருடமாக விஜய்யை திரையில் பார்க்க முடியாமல் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அவ்வளவையும் சேர்த்து வைத்து ‘மாஸ்டர்’ டீசரின் மீது தங்களது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் டீசரை தியேட்டர்களிலும் வெளியிட ஏற்பாடு செய்தது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம்
Web Title:Master teaser today live thalapathi vijay master tamil movie teaser release
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center