கடல் ஆழத்தில் ராட்சச கரப்பான்பூச்சி கண்டுபிடிப்பு


கடலின் ஆழத்தில் இருந்து ஒரு புதிய உயிரினம் வெளிப்பட்டுள்ளது. அது ஒரு கரப்பான்பூச்சி. சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு 2018ம் ஆண்டில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவின் தெற்கு கடற்கரையில் உள்ள பான்டனில் உள்ள இந்தியப் பெருங்கடலின் ஆய்வு செய்யப்படாத கடல் ஆழத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, புராண இருள் கடவுள் ஸ்டார் வார்ஸ் டார்ட் வேடரின் ஹெல்மெட் அணிந்திருப்பதைப் போலத் தோன்றும் ஒரு விலங்கைக் கண்டுபிடித்தனர்.​

இந்த மாத தொடக்கத்தில், இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு, ஆய்வுக் குழு “பாத்தினோமஸ் ராட்சசா”, “சூப்பர்ஜெயண்ட்” பாத்தினோமஸ் என்ற புதிய இனத்தைக் கண்டுபிடித்ததை உறுதிசெய்தது. பின்னர் அது “கடல் கரப்பான் பூச்சி” என்று கூறப்படுகிறது.

விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை ஜூலை 8ம் தேதி மதிப்பாய்வு செய்து, திறந்த-அணுகல் பல்லுயிர் ஆராய்ச்சி இதழான ‘ஜூக்கீஸ்’-இல் தெரிவித்துள்ளனர். (‘புதிய சூப்பர்ஜெயண்ட் கடல் ராட்சச கடல் கரப்பான்பூச்சி (Crustacea, Isopoda, Cirolanidae)தெற்கு ஜாவாவிலிருந்து, இந்தோனேசியாவிலிருந்து வந்த இனத்தின் முதல் பதிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையின் ஆசிரியர்கள், கோனி எம் சிடபாலோக், ஹெலன் பி எஸ் வோங் மற்றும் பீட்டர் கே எல் என்ஜி ஆகியோர் “இந்தோனேசிய வார்த்தையான ‘ராட்சச’என்பது மாபெரும், அதன் மகத்தான அளவையும் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது.” என்று எழுதியுள்ளனர்.

ஆழமான பெருங்கடல்களைப் பற்றிய விஞ்ஞான அறிவில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருகிறது, இதில் ​​கரப்பான் பூச்சியின் வருகை பெரும்பாலும் அந்த உயிரினத்தின் கொடூரமான காட்சியின் காரணமாக உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. அதன் படங்களைப் பார்த்தவர்களில் பெரும்பாலோர் கொடுங்கனவு என்று விவரித்துள்ளனர்.

இந்த ராட்சச கரப்பான் பூச்சி எவ்வளவு தீமையானது?

ராட்சச கரப்பான்பூச்சி (Bathynomus raksasa) என்பது கரப்பான் பூச்சி இனத்தில் உள்ள ஒரு மாபெரும் கடல் பூச்சி உயிரினம் (isopods) ஆகும். இந்த மாபெரும் கடல் உயிரினம் (isopods) நண்டுகள், இரால்களுடன் (அவை டிகாபோட்களின் வரிசையைச் சேர்ந்தவை) தூரத்து தொடர்பு கொண்டவை. மேலும் அவை பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் குளிர்ந்த ஆழத்தில் காணப்படுகின்றன. கடல் கரப்பான் பூச்சிக்கு 14 கால்கள் உள்ளன. ஆனால், இவை உணவைத் தேடி கடலின் ஆழத்தில் வலம் வர மட்டுமே கால்களை பயன்படுத்துகின்றன. கரப்பான் பூச்சியின் தலை மற்றும் கூட்டு கண்களின் வடிவம் காரணமாக டார்த் வேடர் தோற்றம் ஏற்படுகிறது.

இந்த ராட்சச கரப்பான்பூச்சி (Bathynomus raksasa) சுமார் 50 சென்டிமீட்டர் (1.6அடி) நீளத்தைக் கொண்டுள்ளது. இது ஐசோபாட்களில் பெரியது. இது பொதுவாக 33 செ.மீக்கு மேல் (ஒரு அடிக்கு மேல்) வளராது. 50 செ.மீ வளர்ச்சியை எட்டும் ஐசோபாட்கள் சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. ராக்ஸாசாவின் அளவைத் தாண்டிய ஐசோபாட் இனங்களின் ஒரே உறுப்பினர் பாத்தினோமஸ் ஜிகான்டியஸ், இது பொதுவாக மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான நீரில் காணப்படுகிறது.

இந்த கரப்பான் பூச்சியைக் கண்டுபிடித்தவர் யார்?

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என 31 உறுப்பினர்களைக் கொண்ட குழு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பீட்டர் என்ஜி தலைமையில் வழி நடத்தப்பட்டது. இந்தோனேசிய அறிவியல் கழகத்தின் (எல்ஐபிஐ) கடல்சார் ஆய்வுக்கான ஆராய்ச்சி மையம் (ஆர்.சி.ஓ). மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இணைந்து இந்த ஆய்வை நடத்தியது.

அவர்கள் டிராலிங் முதல் அகழ்வாராய்ச்சி வரையிலான நுட்பங்களைப் பயன்படுத்தி, இரண்டு வாரங்களில் 63 இடங்களை ஆய்வு செய்து, ஜெல்லிமீன்கள், கடற்பாசிகள், புழுக்கள் மற்றும் மொல்லஸ்கள் முதல் நண்டுகள், நட்சத்திரமீன்கள், அர்ச்சின்கள் வரை ஆழ்கடலில் இருந்து 12,000 மாதிரிகளுடன் திரும்பினர். இந்த பயணத்தில் 800 இனங்கள் இருந்தன, அவற்றில் 12 உயிரினங்கள் விஞ்ஞானிகள் அறியாதது.

இந்த கரப்பான்பூச்சியின் கண்டுபிடிப்பு அறிவியலுக்கு எவ்வாறு முக்கியமானது?

இப்போது வரை, விஞ்ஞான சமூகம் ஐந்து சூப்பர்ஜெயண்ட் இனங்கள் பற்றி அறிந்திருந்தது, அவற்றில் இரண்டு மேற்கு அட்லாண்டிக்கில் காணப்படுகின்றன. இந்தோனேசியாவிலிருந்து வந்த இனத்தின் முதல் பதிவு இதுவாகும்.

இந்த ராட்சச கரப்பான்பூச்சி (Bathynomus raksasa) என்பது இந்தோ-மேற்கு பசிபிக் பகுதியிலிருந்து கண்டறியப்பட்டுள்ள ஆறாவது ‘சூப்பர்ஜெயண்ட்’ இனமாகும். மேலும், இது இந்த இனத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய உறுப்பினர்களில் ஒன்றாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு அறியப்பட்ட மாபெரும் ஐசோபாட்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தியுள்ளது. ராட்சச கரப்பான்பூசி அதன் ரகசியங்களை வெளிப்படுத்துவதால், ஆழத்தைப் பற்றிய அறிவை அதிகரிக்க இது பங்களிக்கும்.

ராட்சச கரப்பான்பூச்சி என்ன சாப்பிடுகிறது? அவற்றை உண்ண முடியுமா?

ஒரு துப்புறவு உயிரினமாக ராட்சச கரப்பான்பூச்சி (Bathynomus raksasa) திமிங்கலங்கள் மற்றும் மீன் போன்ற இறந்த கடல் விலங்குகளின் எச்சங்களை சாப்பிடுகிறது. ஆனால், உணவு இல்லாமல் நீண்ட காலத்திற்கு வாழ முடியும். இது கரப்பான் பூச்சியுடன் தொடர்புடைய ஒரு பண்பு.

ராட்சச கரப்பான்பூச்சி தனது உணவை தானே தயார் செய்துகொள்கிறது. மற்ற உயிரினங்களுடன் தலையிடவில்லை. கடல் கரப்பான் பூச்சி அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான கடல் வேட்டையாளர்கள் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் சில ஐசோபாட்கள் உண்மையில் உண்ணப்பட்டாலும், ரக்ஸாசாவில் மிகக் குறைவான இறைச்சியும் அடர்த்தியான ஓடும் உள்ளன, மேலும் மனிதர்கள் அவற்றை சுவையுடையதாகக் காண வாய்ப்பில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: