காஷ்மீர் விவகாரம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும், இந்தியாவும்

காஷ்மீர் விவகாரம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும், இந்தியாவும்


இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 46வது கவுன்சில் கூட்டத்தில்  ஜம்மு-காஷ்மீர் குறித்து தீர்மானம் இயற்றியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்தியா தனது செய்திக் குறிப்பில், “எதிர்காலத்தில் இதுபோன்ற குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும். சகிப்புத்தன்மை , தீவிரவாதம், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் மோசமான பதிவைக் கொண்டுள்ள  ஒரு குறிப்பிட்ட நாடு, தன்னைப் பயன்படுத்திக் கொள்ள அமைப்பு தொடர்ந்து அனுமதிப்பது வருந்தத்தக்கது “ என்று தெரிவித்தது.  இது, பாகிஸ்தானைப் பற்றிய குறிப்பு.

OIC என்றால் என்ன?

57 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு  ஐ.நா.வுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பாகும்.

“உலகின் பல்வேறு மக்களிடையே சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இஸ்லாம் உலகின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல்” என்பது இதன் நோக்கமாகும். இதில்,  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் மட்டும் உறுப்பினராக உள்ளன. ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இதர சில சிறிய நாடுகள் பார்வையாளர்  அந்தஸ்தை பெற்றுள்ளன.

ஒரு அமைப்பாக ஒஐசி- யுடன் இந்தியாவின் உறவு?

உலகின் 10% க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 2018ல் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 46வது கவுன்சில் கூட்டத்தில் வாங்க தேசம் பரிந்துரைத்தது. ஆனால், இந்த திட்டத்தை பாகிஸ்தான்  எதிர்த்தது.

1969 ஆம் ஆண்டில், மொராக்கோ நாட்டில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இந்தியா அழைக்கப்படவில்லை.  மாநாட்டிற்காக மொராக்கோ சென்றிருந்த  இந்திய வேளாண் துறை அமைச்சார் விவசாய அமைச்சர் ஃபக்ருதீன் அலி அகமது பாகிஸ்தானின் வற்புறுத்தல் காரணாமாக கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

2019ல் அபுதாபியில்  நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 46வது கவுன்சில் கூட்டத்தில் மரியாதை நிமித்தமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

அபுதாபியில் தொடக்க விழாவில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், “இந்த அழைப்பு  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் வாழும் 185 மில்லியன் முஸ்லிம்களுக்கான அங்கீகாரமாகவும், பன்மைத்துவ நெறிமுறைகளுக்கு அவர்கள் அளித்த  பங்களிப்பையும், இஸ்லாமிய உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பையும்  பறைசாற்றும் விதமாக அழைப்பு அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பின்பாக இந்தியா – பாகிஸ்தான்  இடையே பதட்டங்கள் அதிகரித்து வந்த நேரத்தில், இந்த அழைப்பு இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாக கருதப்பட்டது. சுவராஜுக்கான அழைப்பை பாகிஸ்தான் எதிர்த்த போதிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோரிக்கையை புறக்கணித்தது.

காஷ்மீரில் ஒஐசி அமைப்பின் நிலைப்பாடு என்ன?

பொதுவாக காஷ்மீர் விவகாரங்களில், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை  இந்த அமைப்பு ஆதரிக்கிறது. மேலும், அட்டூழியம், வன்முறை, சமூகப் பகைமை குறித்து விமர்சிக்கும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த அறிக்கைகள் வருடாந்திர சடங்காக மாறியுள்ளது. இந்தியாவும் இதற்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

கடந்த ஒரு வருடமாக, இஸ்லாமாபாத் இஸ்லாமிய நாடுகளிடையே  இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்ட முயன்று வருகிறது. இருப்பினும், துருக்கி, மலேசியா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே இந்தியாவை பகிரங்கமாக விமர்சித்தன.

விமர்சனங்ளை இந்தியா எவ்வாறு கையாளுகிறது ?

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உறுதியாகத் தெரிவித்து வருகிறது.  1952-லிருந்து நடைபெற்று வரும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் மூலம் இம்மாநில மக்களால் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்று, ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி துணிச்சலான முடிவை அரசு எடுத்துள்ளது என்று இந்தியா பதிலளித்து வருகிறது.  இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு மற்ற நாடுகளுக்கு அறிவுறித்தியது.

ஆனால், தற்போது  ஒரு படி மேலே சென்று, ஒரு குறிப்பிட்ட நாடு, தன்னுடைய சுய லாபத்திற்காக தன்னை  பயன்படுத்திக் கொள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து அனுமதிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் என்ன?

அமைப்பில் உள்ள பல இஸ்லாம் நாடுகள் இந்தியாவுடன் வலுவான இருதரப்பு உறவுகளைக் கொண்டிருகின்றன.  கூட்டறிக்கையை புறக்கணிக்குமாறும்  அவர்கள் சமிக்ஞை  செய்கின்றன. இருப்பினும், பாகிஸ்தானின் நிர்பந்தத்தால் தயாரிக்கப்படும் கூட்டு அறிக்கையில்  அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கையெழுத்திடுகின்றன. எனவே, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் இந்த இரட்டைத்தன்மை நிலைப்பாட்டை  இந்தியா தற்போது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து வலுவான பார்வையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் விசயத்தை மேலும் சிக்கலாக்கும் என்பதால் இந்தியாவும் இப்பிரச்சினையை துரிதமாக கையாண்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: