கு றி வை க்கும் சனியால் இந்த ராசிக்கு ஆபத்து? திடீர் பணவரவு திக்குமுக்காட போகும் ராசி யார் யார் தெரியுமா?


ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் ரிஷபம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் புதன், ராகு உடன் சஞ்சரிக்கிறார்.

கடகம் ராசியில் சூரியன், தனுசு ராசியில் குரு,கேது, மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.கொரோனா வைரஸ் நோய் தொற்று தீ விரமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் எல்லோருமே எச்சரிக்கையாக வாழ வேண்டியிருக்கிறது. ஜூலை 30 ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் புதன் ராகு, நான்காம் வீட்டில் சூரியன் ஒன்பதாம் வீட்டில் கேது உடன் குரு, பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் உங்க ராசிநாதன் செவ்வாய் என கிரகங்கள் சாதகமாக உள்ளன. சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது என்றாலும் வார கடைசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

31.07.2020 காலை 07.05 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும்.

எடுத்த காரியத்தை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு இது நல்ல வாரம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் மனமும் உடம்பும் உற்சாகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வீட்டிலும் வெளியிலும் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். இல்லத்தரசிகளுக்கு நன்மையான மாதம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். திடீர் பணவரவு திக்குமுக்காட வைக்கும். கந்த சஷ்டி கவசம் படிங்க.

ரிஷபம்

ராசியில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு, புதன், மூன்றாம் வீட்டில் சூரியன் எட்டாம் வீட்டில் குரு, கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கைகூடி வரும். திடீர் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

பயம் பதற்றம் நீங்கும். சமூகத்திலும் குடும்பத்திலும் மதிப்பு மரியாதை கூடி வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் தலைமை பதவி தேடி வரும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்பு வரும், கல்யாண யோகம் கை கூடி வரப்போகிறது. சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

மிதுனம்

உங்களுடைய ராசியில் புதன், ராகு, இரண்டாம் வீட்டில் சூரியன் 12ஆம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் குரு, கேது, எட்டில் சனி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் உற்சாகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

சிலருக்கு திடீர் வேலை வாய்ப்புகளும் தேடி வரும். உங்களுக்கு இதுநாள் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் நீங்கும். மாத பிற்பகுதியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திங்க. சிலருக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சுப காரிய பேச்சுவார்தைகள் தொடங்கலாம். திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் வரும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. நீங்க கடன் வாங்கி யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. தான தர்மம் பண்ணுங்க வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வோடும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் சூரியன், விரைய ஸ்தானத்தில் ராகு, புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் கேது,குரு, ஏழாம் வீட்டில் சனி,ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மூத்த சகோதரர்கள் மூலம் பண வருமானம் வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

நிறைய யோகங்கள் நடக்கும் மாதம். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். சுப காரியங்கள் தொடர்பாக சில பயணங்கள் செல்வீர்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். வங்கிக்கடன் முயற்சி செய்வீர்கள் எளிதாக கிடைக்கும். நீண்ட நாட்களாக அடைக்க நினைத்த கடன்கள் அடையும்.

முன் கோபத்தை குறைத்து நிதானமாக இருங்க. பேச்சிலும் காரம் வேண்டாம் நிதானமாக பேசுங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்பு தேடி வரும் பயன்படுத்திக்கங்க. வருமானம் வருவது போல செலவுகளும் தேடி வரும். சனி சூரியன் பார்வை சில சங்கடங்களைத் தரலாம். திருமணம் சுப காரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களே கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு,கேது, ஆறாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, புதன் விரைய ஸ்தானத்தில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

வீண் விரைய செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். பேச்சில் நிதானத்தோடும் பொறுமையாகவும் பேசுங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நீங்க எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் போகணும் காரணம் எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பது சிறப்பானதல்ல. வண்டி வாகனத்தில் போகும் போது நீங்க எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் போவது நல்லது.

குரு பகவான் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். உங்க நிதி நிலைமை இந்த வாரம் நன்றாக இருக்கும். திடீர் பணவரவு திக்குமுக்காட வைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரும் கவனம்.

கன்னி

உங்களுக்கு நான்காம் வீட்டில் குரு,கேது, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் ஸ்தானத்தில் ராகு, புதன் லாப ஸ்தானத்தில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். நீங்க எதிர்பார்க்காத வகையில் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். கவலைகள் தீரும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வருமானம் வரும். பிள்ளைகளின் படிப்பிற்கு சுப செலவுகள் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. பண விவாகாரங்களிலும் விழிப்புணர்வோட இருங்க. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு திடீர் லாபம் வரும்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு,கேது, நான்காம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் ஸ்தானத்தில் ராகு, புதன் பத்தாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. விலை உயர்ந்த பொருட்கள், பணத்தை பத்திரமாக வைத்திருங்கள், நிதி நிலைமை நன்றாக இருக்கும் புதிய திட்டங்கள் எதுவும் வேண்டாம். பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

வேலை மாற வேண்டும் வீடு கட்டவேண்டும் என்று நினைத்திருந்தால் அதை ஒத்திப்போடுங்க. சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் வரும். வீட்டில் கணவன் மனைவி பிரச்சினை இருந்திருக்கும் மனசு விட்டு பேசுங்க. நோய் தொற்றுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்

உங்களுக்கு இரண்டாம் வீட்டில் குரு,கேது, மூன்றாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் ஸ்தானத்தில் ராகு, புதன் ஒன்பதாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் ஆதரவும் பெருகும்.

வருமானம் அபரிமிதமாக கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். பணவரவு அபரிமிதாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் வாய்ப்புகள் தேடி வரும். சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு உயரும். கணவன் மனைவி உறவில் மனக்கசப்புகள் வந்து நீங்கும்.

இல்லத்தரசிகள் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். எதிலும் எச்சரிக்கையோடு இருங்க. வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள், வண்டி வாகனம் வாங்கலாம். உற்சாகமாக இருப்பீர்கள். தெம்பும் தைரியமும் கூடும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

உங்களுக்கு ராசிக்குள் குரு,கேது, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் ஸ்தானத்தில் ராகு, புதன் எட்டாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். சொந்த பந்தங்களிலும் பேசும் போது கூட எச்சரிக்கையாக இருங்க.

வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. பயணங்களில் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாதீர்கள். இருக்கிற வேலையில் கவனமாக இருங்க. பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்கள் தீரும். சிக்கல்கள் தீரும் என்றாலும் பாத சனி சின்னச் சின்ன பிரச்சினைகளை கொடுக்கும் கவனமாக இருங்கள். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் வேண்டாம். பண நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குல தெய்வ அருள் கிடைக்க ஆடி அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மகரம்

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்குள் சனி, மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்,ஆறாம் ஸ்தானத்தில் ராகு, புதன் ஏழாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மிகப்பெரிய யோகம் வரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வருமானம் அதிகரிப்பதால் கடன் பிரச்சினைகள் தீரும். வேலை செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. பெண்கள் இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதம். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும்.

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அகலகால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். அமைதியும் நிதானமும் இருந்தால் எதையும் எளிதில் சமாளிக்கலாம்.

கும்பம்

வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். பேச்சில கவனமாக இருங்க. குடும்ப ஸ்தானத்தில செவ்வாய் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாபாரத்தில் லாபம் வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பண வரவு வரும்.

நல்ல செய்திகள் தேடி வரும். புதிய தொழில் வாய்ப்புகள் வரலாம் பயன்படுத்திக்கங்க. பொறுமையும் நிதானமும் இருந்தால் நினைத்தது நடக்கும். சூடான வார்த்தைகளை தவிர்த்து விடுங்க. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சமூகத்தில் உங்க கவுரவம் உயரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சண்டை சச்சரவு வந்தாலும் பொறுமையாக இருங்க. திடீர் ராஜயோகமும், திருமண யோகமும் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. உங்க குடும்பத்தில வாழ்க்கைத்துணையோட ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

மீனம்

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்குள் செவ்வாய், ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு,கேது, ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு, புதன் ஐந்தாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு நோய் பயம் நீங்கும் இதுநாள் வரை வயிற்றில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் தேடி வரப்போகிறது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கர்ப்பிணிகள் உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளவும், சத்தான உணவுகளை சாப்பிடுங்க. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. திடீர் செலவுகள் வரலாம், திட்டமிட்டிருந்த காரியங்கள் எளிதில் நடைபெறும். வேலையில் கவனம் செலுத்துங்கPost Views:
89www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: