கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கறிஞர்களை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி


இந்த வழக்கு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட்ட விதம் குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு ஆட்சேபனை தெரிவித்தபோதும், ஜாமீனை எளிதாக்குவதற்காக மனுவில் கையெழுத்திட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் தனது வழக்கறிஞர்களை சந்திக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு கபன் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் (கே.யு.டபிள்யூ.ஜே) தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்தனர்.

கே.யு.டபிள்யூ.ஜே சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானதைத் தொடர்ந்து, அவருடைய கட்சிக்காரரை சந்திக்க ஆட்சேபனை இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். கப்பனை அவருடைய வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் கப்பனை சந்திபதற்கு எந்த ஆட்சேபனையும் இருந்தது இல்லை. இப்போதும் ஆட்சேபனை இல்லை” என்று கூறினார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற அமர்வு கப்பனை சந்திக்க அனுமதி அளித்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வரை ஒத்திவைத்துள்ளது.

“இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவையுங்கள். இதற்கிடையில், நீதிமன்றங்களில் உதவி பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையொப்பத்தை சிறையில் பெறலாம்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், உத்தரப் பிரதேச அரசு, “நீதிமன்றக் காவலில் இருப்பதைப் போல உறவினர்களுடனோ அல்லது வழக்கறிஞர்களுடனோ பேசுவதற்கு கப்பன் அனுமதிக்கப்படவில்லை என்று முற்றிலும் தவறான கூறப்பட்டுள்ளது. அவர் எழுத்துப் பூர்வமாக கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மூன்று முறை தொலைபேசியில் உரையாடினார்.” என்று கூறியது.

“குற்றம் சாட்டப்பட்ட சித்திக் கப்பன் உறவினர் எவரையும் அல்லது அல்லது வழக்கறிஞர் யாரையும் சந்திக்க ஒருபோதும் கோரவில்லை. அல்லது அத்தகைய விண்ணப்பத்தை தகுதிவாய்ந்த நீதிமன்றம் / சிறை அதிகாரிகள் முன் தாக்கல் செய்யவில்லை” என்று உ.பி அரசு அந்த பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட்டது.

மலையாள செய்தி இணையதளமான அழிமுகத்தில் பணிபுரியும் கப்பன் மற்றும் மூன்று பேர் அக்டோபர் 5ம் தேதி ஹத்ராஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது மதுராவில் கைது செய்யப்பட்டனர். ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கப்பனும் இன்னும் இரண்டு சி.எஃப்.ஐ உறுப்பினர்களும் ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக மத ரீதியான பகையைத் தூண்டுவதற்கான சதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்று உத்தரப் பிரதேச போலீசார் குற்றம் சாட்டினர். மெலும், அவர் மீது யுஏபிஏ சட்டம் தேசத்துரோக சட்டம் உட்பட கடுமையான பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், கப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்ததாக ஊடகங்களில் வெளியான நியாயமற்றவை என்று சி.ஜே.ஐ போப்டே கூறினார். “எங்கள் முந்தைய உத்தரவைப் பற்றி மிகவும் நியாயமற்ற செய்தியாக இருந்தது. தவறான செய்தியைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். பத்திரிகையாளருக்கு நிவாரணம் மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உத்தரபிரதேசம் தாக்கல் செய்த பதிலைத் தாண்டி, மறுபரிசீலனை செய்யுமாறு சிபலிடம் பெஞ்ச் கேட்டுக் கொண்டது. “ஜாமீன் தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு, நீங்கள் பதிலைப் படித்தீர்கள். பின்னர், நாங்கள் உங்களை முழுமையாகக் விசாரிப்போம்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

கடந்த விசாரணையில், அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் மனுக்களை தாக்கல் செய்வதிலிருந்து தனிநபர்களை ஊக்கப்படுத்த முயற்சிப்பதைக் கவனிக்கும் அதே வேளையில், கப்பனை விடுவிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றம் மத்திய மற்றும் உத்தரபிரதேச அரசிடமிருந்து பதில்களைக் கோரியது. அந்த பிரிவு, அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையை தனிநபர்களுக்கு வழங்குகிறது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், கப்பன் சாதி பிளவுகளை உருவாக்குவதற்கும் சட்டம் ஒழுங்கு நிலைமையைத் தொந்தரவு செய்வதற்கும் மிகவும் உறுதியான முடிவோடு கப்பன் பத்திரிகையாளர் போர்வையில் ஹத்ராஸுக்குச் சென்று கொண்டிருந்தார் என்று உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது.

“கப்பன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) அலுவலக செயலாளராக இருந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்த ‘தேஜாஸ்’ என்ற செய்தித்தாளின் அடையாள அட்டையைக் காண்பித்து பத்திரிகையாளர் அட்டையைப் பயன்படுத்துகிறார். ஆனால், அது 2018ல் மூடப்பட்டது” என்று உ.பி.யின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லைவ் லா இணையதளம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அதில், “அவர்களிடம் இருந்து ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி போன்ற தலைப்புகளைக் கொண்ட துண்டு பிரசுரங்கள், மொபைல் போன்கள், மடிக்கணினி, ஆகியவை முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அவர்களுடைய உறவினர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: