கொரோன தடுப்பு மருந்து : சென்னையில் 2 இடங்களில் பரிசோதனை


By: WebDesk
Published: August 25, 2020, 10:04:24 AM

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா உருவாக்கிய கோவிஷீல்ட்  கொரோனா தடுப்பு மருந்தின்   2 மற்றும் 3 கட்ட மனிதப் பரிசோதனைகள், சென்னையைச் சார்ந்த இரண்டு நிறுவனங்களில் நடக்க இருக்கிறது.

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, 150 முதல் 200 வரையிலான ஆரோக்கியமான மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளின் இரண்டாவது , மூன்க்ராவது கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள  பொது சுகாதாரம் அலுவலகத்தில் இந்த மருத்துவப்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவத் துறையின் மருத்துவர்கள்  இந்த சோதனைக்கு இணை ஆய்வாளர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவதாக, இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகமும்  கோவிஷீல்ட்  கொரோனா தடுப்பு மருந்தின்   2 மற்றும் 3 கட்ட மனிதப் பரிசோதனைகளில் ஈடுபட முன்வந்துள்ளது. பாரத் பயோடெக் கோவாக்சின்,    ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா  கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் எங்கள் நிறுவனத்தில்  மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.     ஆஸ்ட்ரா ஜெனிக்கா  கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை குறைந்தது 120 மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று   அந்நிறுவனம் தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai corona vaccine trails oxford university astra zeneca covid 19 vaccine





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: