கோயம்பேசு மார்கெட்டுக்கு காய்கறி வாங்க போங்க.. அதுவும் இங்க விலையை பார்த்துட்டு!

கோயம்பேசு மார்கெட்டுக்கு காய்கறி வாங்க போங்க.. அதுவும் இங்க விலையை பார்த்துட்டு!


onion price today vegetable price : ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் தற்போது சரக்குப் போக்குவரத்து மற்றும் சந்தை விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் தேவையான அளவுக்கு காய்கறிகளின் வரத்து உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயர்வு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான இன்று விலையேற்றம் காணப்படுகிறது.

இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் அதே இடத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டது முதல் வழக்கம் போல் காய்கறிகள் வந்து கொண்டிருக்கிறது. தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வருகிறது. இருந்த போதிலும் சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

முட்டைகோஸ் 15லிருந்து 20, கேரட் 50லிருந்து 60, பீன்ஸ்ட் 40லிருந்து 70, பல்லாரி 15லிருந்து 25, சின்ன வெங்காயம் 40லிருந்து 70, பச்சை மிளகாய் 25லிருந்து 30, உருளைக்கிழங்கு 25லிருந்து 30, பாகற்காய் 30லிருந்து 35, சேனைக்கிழங்கு 30லிருந்து 35, சேப்பக்கிழங்கு 30லிருந்து 40, இஞ்சி 60லிருந்து 70, அவரைக்காய் 40லிருந்து 60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

கத்தரிக்காய் 30லிருந்து 25 ஆக குறைந்துள்ளது.

அதேநேரத்தில் தக்காளி 30, வெண்டைக்காய்25, புடலைங்காய் 20 என்று அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

காய்கறிவிலை உயர்வுக்கு முக்கிய காரணம் டீசல் விலை அதிகரிப்பே ஆகும்.

இதனால், லாரி கட்டணம் உயர்ந்து காய்கறி விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி வாங்க குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்களை அனுமதிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான்வியாபாரம் பழையபடி நடைபெறும். என அவர் கூறினார்.

மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை உயர்வு. இதனை வாங்கி சில்லரையில் விற்பவர்கள் கிலோவுக்கு 10 முதல்15வரை கூடுதலாக விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: