சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-  பாஜக கூட்டணித் தொடரும் : முதல்வர்


By: WebDesk
November 21, 2020, 7:00:49 PM

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-  பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஓ பன்னர்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் ஆறு மாதங்களில் தமிழகம் தேர்தலுக்கு செல்கிறது.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

இதனையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக அரசு ஏற்பாடு செய்த  நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை அமித் ஷா  மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதுதவிர, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், கோவை அவினாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பிலான உயர்மட்ட சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

உள்கட்டமைப்பு திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக மறைந்த அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ ஜெயலலிதா ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் அஞ்சலி செலுத்தினார்.

 

இதனையடுத்து உரையாற்றிய அமித் ஷா, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.  மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் வகிக்கிறது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது “என்றும் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu 2021 assembly election bjp admk allaince will continue





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: