
சின்னத்திரை நடிகை கிருத்திகாவும், பவானி ரெட்டியும் உள்ள புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கில் வைரலாகி வருகிறது.
’மெட்டி ஒலி’ பாண்டவர் இல்லம், ரேவதி ’ஆடுகிறான் கண்ணன்’, ’முந்தானை முடிச்சு’, ’கணவருக்காக’, ’வம்சம்’, ’செல்லமே’ போன்ற சன்டிவி சீரியல்களில் நடித்தவர் கிருத்திகா. முந்தானை முடிச்சு சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போது இவருக்கு திருமணமானது .
தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி, தமிழில் புகழ் பெற்றவர் ’சின்னத்தம்பி’ சீரியலில் பவானி ரெட்டி நாயகியாக நடித்தார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் நந்தினியாக நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். கிராமப்புறங்களிலும் இவருக்கு மவுசு அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவி-யின் ராசாத்தி சீரியலிலும் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
கிருத்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடர் மூலம் பவானி ரெட்டிக்கு அன்பிற்குரிய தோழியாக மாறினார்.
இந்நிலையில், பவானி ரெட்டியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருத்திகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார்.
தனது பதிவில், ” பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது அருகில் இல்லாதிருப்பது மிகவும் மோசமானது .. உன்னை மிகவும் நேசிக்கிறேன். இந்த நேசம் இப்போதும் போலவே எப்போதும் தொடர விரும்புகிறேன்… என்னை அறிந்தவள் நீ. என்னைப் புரிந்துகொள்கிறாய். இப்போது போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறேன். எப்போதும் அந்த புன்னகை இருக்க வேண்டும். .. மீண்டும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter
Web Title:Serial actress pavani reddy krithika annamalai instagram photos
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center