சித்ராவின் மாஸ் டிக்டாக் டான்ஸ்… இப்படி ஆடியவரா இந்த முடிவெடுத்தார்?… வைரல் வீடியோ

சித்ராவின் மாஸ் டிக்டாக் டான்ஸ்… இப்படி ஆடியவரா இந்த முடிவெடுத்தார்?… வைரல் வீடியோ


By: WebDesk
Updated: December 13, 2020, 10:22:38 PM

சின்ன திரை நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா உயிருடன் இருந்தபோது அவர் மாஸாக டிக்டாக் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சித்ராவின் டான்ஸைப் பார்த்த ரசிகர்கள், இப்படி டான்ஸ் ஆடியவரா இப்படி முடிடுத்தார் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து மெல்ல முன்னேறி நடிகையானார். அவர் ஒரு படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு பேரும் புகழும் வாங்கிக்கொடுதது என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான்.

இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு சித்ரா சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது. சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவருடைய கணவர் ஹேமந்த்தை அவர் வெளியே அனுப்பிவிட்டு தூக்கிட்டுகொண்டதாகவும் ஹேமந்த் கூறினார். அதே நேரத்தில், சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளது. சித்ராவின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சித்ரா உயிருடன் இருந்தபோது சீனி பேச்சிக்காரி நீ சிரிச்சாலே தீபாவளி என்ற பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். அதில் சித்ரா செமையாக டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் இப்படி டான்ஸ் ஆடிய பெண்ணா இப்படியொரு விபரீத முடிவெடுத்தார் என்று கேள்வி எழுப்பி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Actor chthra tiktok mass dance before she died video goes viral

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: