
Soorarai Pottru vs TamilRockers: கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாகவே ரெடியாகி காத்திருந்த சூரரைப் போற்று, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு ரசிகர்களை தொட்டிருக்கிறது. புதன்கிழமை (இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு) அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் முன்தினமே பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக விஐபி-க்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. பலரும் இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தை வெளியிட்டனர்.
எனவே சூரரைப் போற்று படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியது. இது ஒருபுறமிருக்க, இந்தப் படத்தை கடந்த ஜனவரி மாதமே சூரியா நடித்துக் கொடுத்துவிட்டார். அவரது 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, இந்தப் படத்திற்காக தினமும் ரூ47 லட்சம் வாடகையில் ஒரு விமானம் மட்டுமே சுமார் 2 வார காலத்திற்கு வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் எகிறியது. அதையும் தாண்டி அமேசான் தனது ஓடிடி தளத்திற்கு இந்தப் படம் பெரிய அறிமுகமாக இருக்கும் என கருதுகிறது.
சூர்யா ரசிகர்களும் இந்தப் படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸைப் பொறுத்தே சூர்யாவின் அடுத்தடுத்த படங்களை ஓடிடி நிறுவனங்கள் அதிக விலைக்கு பெறும் வாய்ப்பும் இருக்கிறது.
வழக்கம்போல சினிமாவுக்கு ஆகப் பெரிய வில்லனான தமிழ் ராக்கர்ஸின் மிரட்டல்தான் பட வெளியீட்டாளர்களைப் பதற வைக்கிறது. பொதுவாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களை மிகக் குறுகிய நேரத்தில் திருடி முடித்து தனது இணையதளத்தில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த சட்டவிரோத செயல்பாட்டை இதுவரை திரைத்துறையினரால் தடுக்க இயலவில்லை.
இந்திய நேரப்படி இரவு பத்தரை மணிக்கு வெளியாகும் சூரரைப் போற்று திரைப்படத்தை வியாழன் காலையில் அல்லது பிற்பகலில்தான் பெருமளவிலான ரசிகர்கள் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. அது வரையிலாவது தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் இதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்பதே வெளியீட்டாளர்கள் தரப்பு பிரார்த்தனை.
விஜய் தனது மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதில்லை என்பதில் இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறார். அதற்கு தமிழ் ராக்கர்ஸும் ஒரு காரணமே. தியேட்டரில் வெளியாகும் படங்களையாவது சில மணி நேரங்கள் கழித்துதான் தமிழ் ராக்கர்ஸால் திருட முடிகிறது. ஓடிடி-யில் வெளியாகும் படங்களை சில நிமிடங்களில் அல்லது ஓடிடி-யில் வெளியாகும் முன்பே திருடுவதும் நடக்கிறது.
எத்தனையோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தபிறகும், தமிழ்ராக்கர்ஸுக்கு மூக்கணாங்கயிறு இல்லாதது ஏமாற்றமே!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Soorarai pottru tamil movie tamilrockers threat to soorarai pottru full movie download
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center