
நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்துவருவதால கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டை வெள்ளநீர் சூழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை மாலை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது ஆருகில் உள்ள பகுதிகளில் பலத்த காற்றானது 120-130 கி.மீ வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை முதலே கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து வருகிறது. வெள்ள நீரால் பாதிக்கப்படும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி நிவாண முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.
Water enters the house of late #DMK
patriarch M Karunanidhi in Gopalapuram in #Chennai . The city has been experiencing rains since Monday night. #CycloneNivar #CycloneAlert @DeccanHerald pic.twitter.com/B2kQEpVmxC— Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப (@sivaetb) November 24, 2020
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின வீட்டை வெள்ளநீர் சூழந்தது. கருணாநிதியின் வீட்டை வெள்ள நீர் சூழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Floods around in karunanidhis house at gopalapuram in chennai
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center