சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் புறப்படுகிறது : ஹர்பஜன் சிங் செல்லவில்லை


By: WebDesk
Published: August 20, 2020, 9:47:35 PM

chennai CSK Squad leaves Dubai : அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல், நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும்  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சி.எஸ்.கே அணி நாளை துபாய்   புறப்பட்டு செல்கிறது.

நாளை  புறப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், சில நாட்கள் கழித்து அணியுடன் இணைவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தோனி, சுரேஷ் ரெய்னா. கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

போட்டி விதிமுறைகள்:  இத்தொடரில், மொத்தம் 10 double-headers போட்டிகள் நடைபெறவுள்ளன. அதாவது, ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என்ற கணக்கில், மொத்தம் 10 double-headersஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதில், முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 IST மணிக்கு தொடங்குகிறது.

  • ஒவ்வொரு அணியிலும் தலா 24 வீரர்கள் இருக்க வேண்டும்.
  • போட்டிகள், துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும்.
  • ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக Dreams 11  இருக்கும் ,
  • தொடரின் போது, வீரர்கள் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், மாற்று வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து  , ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2020 chennai csk team dubai departure for ipl matches harbhajan singh not to join

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: