சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு நாளை முதல் அனுமதி


By: WebDesk
Nov 22, 2020, 2:25:34 PM

Tamil News Today Updates : தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என்றும் நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்தம் உருவாகியிருப்பதால், அடுத்த 48 மணிநேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இது, வருகிற 25-ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் அதனால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 25-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கிடேயே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதில் பயணிக்க இ -பாஸ் அவசியமில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-  பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.

“ copy rights NavaIndia”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Today’s Tamil Live : சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த பாஜக தொண்டர்களைப் பார்த்து திடீரென காரைவிட்டு இறங்கி சாலையில் நடந்தபடி கையசைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அமித்ஷா காரிலேயே சென்றுவிடுவார், அவரை நேரடியாக சரியாக பார்க்க முடியாது என்று நினைத்திருந்த பாஜக தொண்டர்களுக்கு அவர் இப்படி திடீரென காரைவிட்டு இறங்கி சாலையில் நடந்துகொண்டே பாஜக தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தியது பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற அமித்ஷா, பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.

Web Title:Tamil news today live chennai weather amit shah in tamilnadu politics admk dmk bjp eps ops stalin corona updateswww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: