செப்டம்பர் 1 முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி


By: WebDesk
Aug 28, 2020, 9:49:33 AM

Tamil News Today Live Updates: கோயம்பேடு காய்கறி சந்தை அடுத்த மாதம் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. தனி நபருக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை. மேலும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் மாநில அரசுகள் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மாணவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்காகவே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களும் வழக்குத் தொடுக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் மற்றும் ஜேஇஇ தேர்வெழுத மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 5,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Web Title:Tamil news today live public library open coronavirus covid 19 tamil nadu



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: