செல்ஃபி வெறியர்களுக்கு இந்த போன் ஸ்பெஷல்… பட்ஜெட்டில் அடங்குமான்னு பாருங்க!


Mobile Phone OPPO Find X2 price review: செல்ஃபிக்களைக் கிளிக் செய்வதற்கான இந்திய கஸ்டமர்களின் அடங்காத பசியைக் கருத்தில் கொண்டு, ஒப்போ அதன் செல்ஃபி-ஃபோகஸ் அலைபேசியை நேர்த்தியாக வடிவமைத்துள்ளதாக தெரிகிறது. அதிலுள்ள முன் கேமரா திறன்களுக்காக அனைத்து தரப்பினரிடையும் பாராட்டைப் பெறுகிறது. உதாரணமாக, ஓப்போ ரெனோ 3 ப்ரோவை எடுத்துக் கொள்ளுங்கள். சிறந்த படத்தைக் கைப்பற்றும் திறன்களைக் கொண்ட ஒரு அற்புதமான சாதனம் அது. உலகின் முதல் 44MP + 2MP இரட்டை பஞ்ச்-ஹோல் கேமரா அமைப்பையும் அது கொண்டுள்ளது.

புதிதாக 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!

வடிவமைப்புகளை ஈர்க்கும் ஓப்போவின் ஆர்வம் நன்கு அறியப்பட்டது தான்.  இப்போது அதன் ஃபைண்ட் எக்ஸ் 2 சீரிஸுடன் உயர்நிலை சந்தையில் நுழைகிறது. 5ஜி சாதனங்களின் முதன்மை வரிசையான இது ஏராளமான உயர்நிலை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஃபைண்ட் X2 மற்றும் ஃபைண்ட் X2 ப்ரோ என இரு அடிப்படை மாடல்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

Oppo find x2 review: ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 மொபைல்

ஒப்போ அறிமுகப்படுத்திய எதிர்கால தொழில்நுட்பத்துடன் கூடிய ஃபைண்ட் எக்ஸ் 2 மிகவும் மேம்பட்டது. முன் மற்றும் பின் நேர்த்தியான இரட்டை வளைவு உடல் வடிவமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இது ஒரு ஒப்போ தனிப்பயனாக்கப்பட்ட, 120Hz QHD+அல்ட்ரா விஷன் ஸ்கிரீனுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ண காட்சி திறன்களைக் கொண்டுள்ளது. தெளிவு, வண்ணம், புதுப்பிப்பு வீதம் மற்றும் பிரகாசம் ஆகியவற்றில் காட்சி புரட்சியையே ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

ஸ்கிரீன்

உயர் தெளிவுத்திறன், அதி-குறைந்த திரை பிரதிபலிப்பு மற்றும் அதிகபட்ச திரை பிரகாசத்துடன், இந்த ஃபோன் வசதியான காட்சி பார்வை அனுபவத்தை உருவாக்குகிறது. வீடியோ தர செயல்திறனை மேம்படுத்தக்கூடிய உள்ளமைக்கப்பட்ட சுயாதீன காட்சி சில்லுடன் O1 அல்ட்ரா விஷன் எஞ்சினைக் கொண்டுள்ளது. அதோடு மோஷன் க்ளியர் மற்றும் HDR வீடியோ மேம்பாட்டையும் கொண்டுள்ளது. மோஷன் க்ளியர், ஆன்லைன் வீடியோ மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகளின் சட்டகத்தை குறைந்த பிரேம் விகிதங்களுடன் அதிகரிக்கிறது.

மெமரி

ஃபைண்ட் எக்ஸ் 2 தடையற்ற பயனர் அனுபவத்தை உறுதிப்படுத்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 மொபைல் தளத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. 12ஜிபி RAM 2 மற்றும் 256 ஜிபி இண்டனல் மெமரியுடன் (எக்ஸ்டனல் மெமரி இல்லை) வருகிறது. ஆடியோவைப் பொறுத்தவரை செயல்திறனில் கட்டமைக்கப்பட்ட உயர் சக்தி கொண்ட இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நான், மல்டிமீடியா உள்ளடக்கம் – பிரைம் வீடியோ திரைப்படங்கள், யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஒரு சில மொபைல் கேம்களின் மிதமான கஸ்டமர். பயனர்கள் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு அனுபவத்தை கொண்டுவருவதற்காக, இசை, திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகள் போன்ற பயன்பாட்டு காட்சிகளை ஃபைண்ட் எக்ஸ் 2 எப்படி புத்திசாலித்தனமாக பொருத்த முடியும் என்பதை அறிந்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

பேட்டரி

பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஃபைண்ட் எக்ஸ் 2, 4200 mah பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் அதிவேக 65W சூப்பர் வூக் 2.0 சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் 38 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். வீடியோ எடிட்டிங் கருவி, சோலூப், வேடிக்கையான பதிவு, எளிதான எடிட்டிங் மற்றும் விரைவான பகிர்வு ஆகியவற்றை வீடியோக்களை எடிட் செய்யவும், தனிப்பட்ட கதைகளை ஒரே கிளிக்கில் பகிர்ந்து கொள்வதற்கும் பயனர்களை ஒருங்கிணைக்கிறது.

கேமரா

ஃபைண்ட் எக்ஸ் 2 இல் மூன்று கேமராக்கள் உள்ளன. 48MP wide-angle lens + 12MP ultra-wide-angle lens + 13MP telephoto lens ஆகியவை 5X ஹைப்ரிட் ஸூமை ஆதரிக்கின்றன. வைட் ஆங்கிள் கேமரா கஸ்டமைஸ்டு சென்சாரை ஏற்றுக் கொள்கிறது. இரட்டை நேட்டிவ் ISO தொழில்நுட்பம் மற்றும் F/1.7 அப்ரேச்சர் ஆகியவற்றால்,  குறைந்த-ஒளியிலும் க்ளியரான படம் பிடிக்க முடிகிறது. ஃபைண்ட் எக்ஸ் 2 இல் 32 எம்.பி செல்பி ஸ்னாப்பர் பொருத்தப்பட்டுள்ளது, இது சோனி IMX616 சென்சார், F/ 2 உடன் வருகிறது.

மொத்ததில் ஃபைண்ட் எக்ஸ் 2, ஓப்போவிலிருந்து கிடைத்த மற்றொரு சிறந்த கண்டுபிடிப்பு. உயர்நிலை அம்சங்களுடன் இது நிரம்பியுள்ளது. நன்றாக இருக்கிறது, நன்றாக வேலை செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் வேகம் மற்றும் சிறந்த ஆல்ரவுண்ட் செயல்திறன் நன்றாக இருக்கிரது. நீங்கள் அதை வாங்க முடிந்தால், தாராளமாக வாங்கலாம்.

விபரம் 

Display: 6.7 அங்குல OLED QHD + காட்சி கார்னிங் கொரில்லா கண்ணாடி 6
Processor: குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 மொபைல் தளம்
Operating system: Android 10.0 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 7.1
Memory & storage: நினைவகம் மற்றும் சேமிப்பு: 12 ஜிபி ரேம், 512 ஜிபி ரோம்
கேமரா: 48MP + 48MP + 13MP (பின்புறம்), 32MP முன் கேமரா
பேட்டரி: 4200 எம்ஏஎச் பேட்டரி
விலை: ரூ .64,990

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: