ஜலதோஷம், இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கான வீட்டு வைத்தியம்


பருவநிலை தற்போது, மாறி உள்ளதால் சளி மற்றும் இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக தாக்கிவிடும். இதுபோன்ற, பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும்.இல்லாவிடில் வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் அந்த வகையில் கடுமையான இருமலை கட்டுப்படுத்த இயற்கையான வைத்தியம் உள்ளது.

தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக: ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். மார்புச்சளி நீங்க: ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க: ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும். ஜலதோஷம் குணமாக: முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

வாந்தி நிற்க: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும். குமட்டல்: கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது

The post ஜலதோஷம், இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கான வீட்டு வைத்தியம் appeared first on Startamila.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: