ஜூலி போல செமையாக டப்மாஷ் செய்த சுரேஷ்: இது எப்போ?

ஜூலி போல செமையாக டப்மாஷ் செய்த சுரேஷ்: இது எப்போ?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜுலியின் வசனத்தை பேசி டப்ஸ்மாஸ் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 2 வாரங்களைத் தாண்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 2வது நாளே சுவாரசியம் தொடங்கிவிட்டது. பெரும்பாலும், பார்வையாளர்களால் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சண்டைகள் உணர்ச்சி கொந்தளிப்புகள், டாஸ்க்குகள் போன்ற நிகழ்வுகளே சுவாரசியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போதைய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்காக பங்கேற்றுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி எல்லா விமர்சனங்களையும் தாண்டி அனைத்து சக போட்டியாளர்களுக்கும் சவாலான போட்டியாளராக மாறியிருக்கிறார். இப்போது, பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தியும் அவரை கார்னர் செய்பவர்களும்தான் சமூக ஊடகங்களில் டிரண்டாகி வருகின்றனர்.

50-களின் இறுதியில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, இன்று தமிழ் தொலைக்காட்சிகளில் புதியவராகப் பார்க்கப்பட்டாலும், அவர் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு பழைய முகம்தான். சுரேஷ் சக்ரவர்த்தி தமிழ், தெலுங்கு சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு, ஆஸ்திரேலியா சென்று அங்கே உணவகம் நடத்தி வருகிறார். யூடியூப் சேனல் தொடங்கி சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த சூழலில்தான் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக தேர்வாகி இன்று பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக கலக்கி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சினையால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே, சுரேஷ் சக்ரவர்த்தி மீது பார்வையாளர்களின் அனுதாபம் சாய்ந்தது.

சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லா டாஸ்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சக போட்டியாளர்கள் அவரை மொட்டை, தாத்தா என எப்படி அழைத்தாலும் சகித்துக்கொண்டு அவர்களுக்கு எல்லாம் எதிர்வினையாற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால், இப்போதைக்கு டிரெண்டிங் பெயர் சுரேஷ் சக்ரவர்த்தியை தாண்டுவதற்கு வேறு யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக தேர்வு செய்வதற்கு முன்பே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஜூலியின் வசனங்களை டப்மாஸ் பேசி அசத்தியுள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி டப்மாஸ் செய்துள்ள அந்த வீடியோவில், ஜுலியின் டயலாக்கான “என்ன அசிங்கப்படுத்தீட்டாங்க நான் என்ன மெண்டலா அக்கா” என கூறுவதை பேசி நடித்துள்ளார்.

இந்த வீடியோவை டம்பாஸ் செய்தபோது, சுரேஷ் சக்ரவர்த்தி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்வோம் என்று நினைத்து பார்த்திருப்பாரா? இதுதான் காலத்தின் புதிர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: