தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம் – ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு


Corona Virus in TN Today Report: தமிழகத்தில் இன்று (ஆக.,26) ஒரே நாளில் 5,606 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.38 லட்சத்தை கடந்தது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,943 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 15 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 145 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-82) மூலமாக, இன்று மட்டும் 75,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 44 லட்சத்து 22 ஆயிரத்து 6361 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இறுதி செமஸ்டர் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,651 பேர் ஆண்கள், 2,306 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,39,946 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,57,286 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 060 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,839 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கமாண்டோ இன்ஸ்பெக்டர் மரணம்; டிஜிபி, காவலர்கள் அஞ்சலி

12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 663 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 531 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரத்து 067 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா:

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,290 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 484 பேருக்கும், சேலத்தில் 451 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும், செங்கல்பட்டில் 294 பேருக்கும், கடலூரில் 286 பேருக்கும், திருவள்ளூரில் 280 பேருக்கும், விழுப்புரத்தில் 189 பேருக்கும், தேனியில் 184 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 20 பேரும், கோவையில் 10 பேரும், காஞ்சிபுரம், சேலத்தில் 8 பேரும், தஞ்சாவூர், திருநெல்வேலியில் தலா 6 பேரும், ஈரோடு, கன்னியாகுமரி, வேலூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விருதுநகரில் தலா 4 பேரும், ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, திருப்பூரில் தலா 3 பேரும், அரியலூர், கடலூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடியில் தலா 2 பேரும், கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,137 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,092 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 359 பேரும், கடலூரில் 333 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், திருவள்ளூரில் 304 பேரும், சேலம், தேனியில் தலா 222 பேரும், காஞ்சிபுரத்தில் 219 பேரும், திருப்பூரில் 182 பேரும், புதுக்கோட்டையில் 181 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: