தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று : 87 பேர் பலி


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாநிலத்தில் இதுவரை  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்-19-னால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  முன்னதாக கேட்டுக் கொண்டார்.

இன்றைய ( 29  ஆகஸ்ட்)கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை இங்கே காணலாம்.

 குணமடைவோர் விகிதம்: 

தமிழகத்தில் கொரோனா தொற்றால்  பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,045-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், இதுவரை 3,55,727-பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, தொற்று அடைந்தவர்களில் இதுவரை 85.60 % குணமடைந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு:    

தமிழகத்தில் இன்று ஒரே நாளில், கொரோனா பாதித்தவர்களில் 87 பேர்  உயிரிழந்தனர். இதுவரை  கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,137-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை நிலவரம்:  தமிழகத்தில் இன்று மட்டும் 78,973 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,99,670 பேருக்கு கோவிட்-19 க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  நாட்டிலேயே தமிழகத்தில்தான் இந்த நோய் தொற்றை கண்டறிவதற்கான ஆய்வகங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 149  கொரோனா பரிசோதனை நிலையங்கள் (63 அரசு + 86 தனியார்) செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை நிலவரம்:  சென்னையில் இன்று மட்டும் 1,285 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டரியப்பட்டது. இதன்மூலம், சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,173 ஆக அதிகரித்தது. சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 13,653 ஆக உள்ளது.

பிற மாவட்டங்கள் நிலவரம்:   

 

மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு

சென்னை-  1285 (ஆகஸ்ட் 3ல் –   1021)
ராணிப்பேட்டை- 151 ( ஆகஸ்ட் 3ல் 382)
விருதுநகர்- 126 ( ஆகஸ்ட் 3ல் 348)
திருவள்ளூர்-  284 (ஆகஸ்ட் 3ல் 332)
செங்கல்பட்டு- 306 ( ஆகஸ்ட் 3ல் 331)
காஞ்சிபுரம்-  241 ( ஆகஸ்ட் 3ல் 322)
தேனி-  125 (ஆகஸ்ட் 3ல் 305)
கோவை – 491 (ஆகஸ்ட் 3ல் 227)
குமரி – 160 (ஆகஸ்ட் 3ல்  215)
தூத்துக்குடி –  89 (ஆகஸ்ட் 3ல் 215)
தி.மலை – 152 (ஆகஸ்ட் 3ல் 212)
கடலூர்- 420 ( ஆகஸ்ட் 3ல் 167)
வேலூர் – 175 (ஆகஸ்ட் 3ல் 134)
மதுரை – 115 (ஆகஸ்ட் 3ல் 106)
திருச்சி- 102 (ஆகஸ்ட் 3ல் 101)
விழுப்புரம் – 171 (ஆகஸ்ட் 3ல் 90 )

புதுக்கோட்டை-   124 (ஆகஸ்ட் 3ல் 86)
நெல்லை-  154 (ஆகஸ்ட் 3ல் 85)
தென்காசி- 75 (ஆகஸ்ட் 3ல் 75 )
திண்டுக்கல்- 129 (ஆகஸ்ட் 3ல் 75)
கிருஷ்ணகிரி- 40 ( ஆகஸ்ட் 3ல் 67)
கள்ளக்குறிச்சி- 82 (ஆகஸ்ட் 3ல்  66)
சேலம்- 432 ( ஆகஸ்ட் 3ல் 66)
சிவகங்கை- 35 (ஆகஸ்ட் 3ல் 64)
ராமநாதபுரம்- 35 (ஆகஸ்ட் 3ல் 62)
திருப்பூர்- 100 (ஆகஸ்ட் 3ல்45)
திருப்பத்தூர்- 30 (ஆகஸ்ட் 3ல் 44)
நாமக்கல்-  70 (ஆகஸ்ட் 3ல்43)
நீலகிரி – 17 (ஆகஸ்ட் 3ல் 37)
நாகை- 99 (ஆகஸ்ட் 3ல் 32)
அரியலூர்- 60 (ஆகஸ்ட் 3ல் 20)
பெரம்பலூர் -19 (ஆகஸ்ட் 3ல் 19)
கரூர்- 30 (ஆகஸ்ட் 3ல் 19)
தஞ்சை- 134 (ஆகஸ்ட் 3ல் 18)
திருவாரூர்- 102 ( ஆகஸ்ட் 3ல் 18)
ஈரோடு – 148 ( ஆகஸ்ட் 3ல்13)
தர்மபுரி –  18 (ஆகஸ்ட் 3ல் 4)

கோவை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட்  3ம் தேதியோடு ஒப்பிடுகையில், இன்றைய கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கிடையே, கோவிட்-19 தொடர்பாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்களுடன் இன்று  ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில்  பிற்பகல் வாக்கில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாகவும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: