தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி !

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி !


By: WebDesk
Oct 31, 2020, 2:55:49 PM

Tamil News Today Live Updates: தமிழகத்தில் பொது முடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அறிவிக்கிறது தமிழக அரசு. இதில் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 303 பேர் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு முதல்வர் நேரில் நன்றி. இறுதியில் சமூக நீதி வென்றதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். தீபாவளிக்குள் 25,000 டன் வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News: ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளாா். இந்த மசோதா தொடா்பாக, மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரலிடம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது கருத்துகளைக் கடிதம் மூலமாகக் கோரினாா். இதற்காக சொலிசிடா் ஜெனரலுக்கு அக்டோபர் 26-ம் தேதி கடிதம் எழுதினாா். அதற்கு அக்டோபர் 29ம் தேதி சொலிசிடா் ஜெனரல் பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். அவரது கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Web Title:Tamil news today live lockdown relaxation sea plane covid 19 coronaviruswww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: