தமிழகத்தில் புதிதாக 4,965 பேருக்கு கொரோனா – 75 பேர் உயிரிழப்பு


TN Corona Reports Today: தமிழகத்தில் இன்று (ஜூலை. 21) புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் அதிகரித்துள்ளது.



இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,887 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 78 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20 லட்சத்து 35 ஆயிரத்து 645 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

மீனவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு – அரசுக்கு கமல்ஹாசன் கட்சி கோரிக்கை

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,010 பேர் ஆண்கள், 1,955 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,09,838 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 70,782 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 ஆக உள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 366 பேருக்கும், விருதுநகரில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும், செங்கல்பட்டில் 256 பேருக்கும், கோவையில் 176 பேருக்கும், ராணிப்பேட்டையில் 173 பேருக்கும், திருவண்ணாமலையில் 163 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், கன்னியாகுமரியில் 159 பேருக்கும், மதுரையில் 158 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 21 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தேனியில் 4 பேரும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூரில் தலா 3 பேரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கடலூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா ஒருவரும் என 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,028 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,49,283 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 22 ஆயிரத்து 332 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: