தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 88 பேர் பலி


Corona Virus Cases in TN Today: தமிழகத்தில் இன்று (ஜூலை 23) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆகவும், பலி எண்ணிக்கை 3,232 ஆகவும் அதிகரித்துள்ளது.



இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,423 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 49 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

ரஜினி இ-பாஸ் வாங்கித்தான் மகள் வீட்டுக்கு சென்றார்… ஆனால்?

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,933 பேர் ஆண்கள், 2,539 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,17,252 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 75,689 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,699 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1.59,384 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 ஆயிரத்து 881 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு

சென்னை – 1,336
விருதுநகர் – 480
திருவள்ளூர் – 416
தூத்துக்குடி – 415
செங்கல்பட்டு – 375
காஞ்சிபுரம் – 330
மதுரை – 274
நெல்லை-246
கோவை -238
ராணிப்பேட்டை – 214
தி.மலை – 193
திருச்சி – 190
தேனி -188
குமரி -137
க.குறிச்சி-134
தஞ்சை-122

வேலூர் – 117
விழுப்புரம் -112
புதுக்கோட்டை-111
திண்டுக்கல்-107
ராமநாதபுரம்-100
சேலம்-47
கடலூர்-79
திருப்பத்தூர்-74
தென்காசி-68
சிவகங்கை-64
நீலகிரி -59
அரியலூர்-48
நாமக்கல் -40
திருப்பூர்-33
கிருஷ்ணகிரி-31
கரூர்-27
ஈரோடு -20
தர்மபுரி – 19
பெரம்பலூர் – 7
நாகை-4
திருவாரூர்-1

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: