தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலர் தகவல்


By: WebDesk
Updated: July 22, 2020, 09:18:44 PM

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் இதுவரை 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்வித்தார். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, டாக்டர் ராதாகிருஷ்ணனிடம், சென்னையில் கொரோனா மரணங்கள் குறைத்து கூறப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார்கள் கூறப்பட்டன. அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தீர்கள். அந்த விசாரனை முடிந்துவிட்டதா? அதன் விவரங்களை சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை முழுமையாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி, கோவிட் மரணங்களை பதிவு செய்ய டாக்டர் வடிவேல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அடக்கம் செய்யும் இடங்களில் பதிவாகும் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை, 102க்கு மேல் இருக்கிற மருத்துவமனைகளில் சொல்லப்படுகிற கோவிட் மரணங்களின் எண்ணிக்கை இதில் இருக்கிற வேறுபாடுகளை ஆராய்ந்து, மார்ச் 1ம் தேதி முதல் இதுவரை 444 மரணங்களை கண்டறிந்துள்ளனர். இது அனைத்தும் மருத்துவர்களுடைய கணிப்பில் கோவிட்டினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல என்ற கருத்து இருந்தபோதிலும், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அதன்கீழ் வரும் அனைத்து மரணங்களையும் கோவிட் மரணங்கள் என்று பதிவு செய்வதற்கு 444 மரணங்களை கண்டறிந்து அதை அரசின் கொரோனா செய்திக் குறிப்பில் வெளியிடப்படும் என்று கூறினார்.

கேள்வி: இந்த 444 மரணங்களில் கோவிட் இல்லாதவர்களும் இருக்கிறார்களா?

மத்திய அரசு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி, தற்போது இது புதிய நோய் என்பதால், வேறு எந்த நோய் காரணத்தால் ஏற்பட்ட மரணங்களாக இருந்தாலும், மாரடைப்பாக இருக்கலாம், மார்பக புற்றுநோயாக இருக்கலாம், லுகேமியாவாக இருக்கலாம், 2-3 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள் அந்த நாம் பதிவு செய்திருக்கிறோம். சிலர் பரிசோதனை செய்வதற்கு முன்னாடியே அவர்கள் இறந்திருக்கிறார்கள் அதுபோன்ற அனைத்துக் காரணங்களையும் இந்த வல்லுனர் குழு ஆராய்ந்து தங்களுடைய அறிக்கையை மாநில அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள். மாநில அரசு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் இந்த 444 மரணங்களையும் மருத்துவர்கள் கணிப்பில் பொது சுகாதாரத்துறைக்கு அறிக்கை அனுப்பாத வழக்குகளையும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேர்க்கப்பட்டு நம்முடைய செய்திக்குறிப்பில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விடுபட்ட 444 பேர் மரணத்திலும் அவரக்ளுக்கு வேறு பல நோய்களும் இருந்தன. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பலி அதிகரிப்பதை நினைத்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Health secretary radhakrishnan says covid 19 deaths 444 unregistered in tamil nadu





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: