தமிழகத்துக்கு 6வது தவணையாக ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு…மத்திய அரசு அறிவிப்பு!


By: WebDesk
Sep 11, 2020, 10:20:00 AM

Tamil News Today: தமிழகத்துக்கு 6வது தவணையாக ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி ஆந்திரா, கேரளா உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு.

இணைய வழி மூலமாக, நடத்தப்படும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார் .. பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்., இந்த மாநாட்டில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்,.

கொரோனா தொற்றால் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளவர்களுக்கு டெக்ஸா மெதாசோன் மருந்து நல்ல பலனை தருவதால், அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். மற்றவை நிரூபிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் 180 தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் 35 தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதனை நடத்தும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Updates: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Today Live: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சட்டமன்ற உறுப்பினர், கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, தி.மு.க. தலைமை, ஆகஸ்ட் 13 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கு.க.செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தி.மு.க.வில் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்திருந்தார்.

மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கு.க. செல்வம் மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த 17வது நகர உரிமையியல் நீதிமன்றம், செப்டம்பர் 18-க்குள் பதிலளிக்க தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக பத்திரிகையில் வெளியான செய்தியை, இணைத்துள்ளார். தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.

நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

Web Title:Tamil news today live corona updates central govt fund vadivel balaji death dmk admk cm edappadiwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: