தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?


தமிழகத்தில் உள்ள அனைத்து  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளரமுறையில் தற்போது 2020-21ம் கல்வியாண்டிற்கான இணைய வழி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 20ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.

TNGASA 2020 ஆன்லைன் செயல்முறை மூலம், விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல்,விருப்பமான கல்லூாிகள் மற்றும் பாடப் பிரிவுகளை பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல் மற்றும் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தல் ஆகிய அனைத்தும் இணைய வழியாக நடத்தப்படும்.

 

விண்ணப்பம் செய்யவேண்டிய இணைய முகவரிகள்: 

  • http://tngasa.in/ 
  • http://tndceonline.org/

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் www.tngtpc.com என்ற இணையதளத்தில் வரும் 31 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பம் பதிவு செய்ய  கீழ்க்கண்ட விவரங்களை மாணவர்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

1. Name of the Candidate (விண்ணப்பதாரின் பெயர்)

2. E-mail ID (மின்னஞ்சல் முகலாி)

3. Mobile phone number (அலைபேசி எண்)

4. Community/Caste details (வகுப்பு சாதி தகலல்கள்) ST/SCA/SC/MBC & DNC/BCM/BC/Others

5. Special Reservation Requested (சிறப்பு இடஒதுக்கீடுகள் வேண்டுதல் )
Sons/daughters of Ex-servicemen (முன்னாள் இராணுவ வீரர் மகன்/ மகள்)
Differently abled persons (மாற்றுத் திறனாளிகள் )
Eminent sports persons (விளையாட்டு  வீரர்கள்)
National Cadet Corps (தேசிய மாணவர் படை )

6. Details of Registration fee to be paid through Internet
(பதிவுக் கட்டணம் இணையதளம்  மூலமாக செலுத்துவதற்கான விவரம் )

Credit card / Debit card / Net banking details
(கடன் அட்ளட/பற்று அட்ளட/இளணயத்தின் மூலம் கட்டணம் செலுத்தும் விவரங்கள்)

Demand Draft id permitted only at DFC
(வரவு காசோலையை  DFC வாயிலாக  மட்டும் செலுத்தலாம்)

7. Aadhar number-optional (ஆதார் எண் – விருப்பம் இருப்பின்)

8. XII std Examination Registration Number (12ம் வகுப்பு தேர்வு பதிவெண்)

9. XII std Mark sheet (12ம் லகுப்பு மதிப்பெண் பட்டியல்)

10. List of Colleges and courses willing to apply (விண்ணப்பிக்க விரும்பும் கல்லூாிகள் மற்றும் பாடப்பிாிவுகரின் பட்டியல்)

 

சான்றிதழ்கள் பதிவேற்றம் :

  •  பாஸ்போர்ட்  அளவு புகைப்படம்
  • ஸ்சகன் செய்யப்பட்ட கையொப்பம்
  •  +2 (HSC) மதிப்பெண் சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • முன்னாள் இராணுவ வீரர்,மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்,தேசிய மாணவர் படை

 

 

விண்ணப்பம் செய்வது எப்படி?

முதலில் http://tngasa.in/ , http://tndceonline.org/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.

விண்ணப்பத்தை  பூர்த்தி செய்ய  தாங்கள் வீட்டிலிருந்தா அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி   இல்லாதவர்கள் , ஒவ்வொரு மாவட்டத்திலும்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்  கல்லூாிகளில் உள்ள மாவட்ட உதவி மையம் (DISTRICT FACILITATION CENTRE) விண்ணப்பிக்கலாம்.

தரவரிசைப் பட்டியலை வெளியிடுதல் (அந்தந்த கல்லூாிகள் தரவரிசை  பட்டியலை வெளியிடும்)

விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில்  தரவரிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணை  அந்தந்த கல்லூாிகள் வழங்கும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு  வழங்கப்பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில்  அந்தந்த கல்லூரிகளுக்கு  சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: