‘திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி’ – மு.க.ஸ்டாலின்


By: WebDesk
Jul 20, 2020, 12:23:58 PM

Tamil News Today Live Updates: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 3725 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. சென்னையில் பொது மக்களிடம் உறுவாகியிருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு திறன் குறித்து பொது மக்களிடம் ஆய்வு நடத்தப்படுகிறது. இதற்காக 12000 மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,46,40,349 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87,34,789 ஆக அதிகரிப்பு. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,08,856 ஆக உயர்ந்துள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பது, தமிழகத்தில் இயங்கும் சில சுயநிதி கல்லூரிக்கு எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை தொடங்க அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது .

இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதினால், இந்த மருத்துவமனையில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Title:Tamil news today live coronavirus covid 19 pm narendra modiwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: