திருமாவளவன் உட்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு


By: WebDesk
Oct 25, 2020, 10:12:28 AM

Tamil News Today : நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காணொளி மூலம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், புதிய வேளாண் சட்டம் எந்த வகையிலும் விவசாயிகளுக்கு நன்மை அளிக்காது என்றும் இந்தச் சட்டத்தினால் வேளாண் துறை சிதைந்து போகும் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தொழில்துறை வளர்ச்சி பின்னடைவைத்தான் சந்தித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார். தமிழக முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது, விவசாயிகளுக்காகக் கவலைப்படவேண்டும் என்று ஸ்டாலின் விமர்சித்தார்.

சென்னையில், 24-வது நாளாக விலையில் எந்தவிதம் மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.84.14-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.95 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காலகட்டம் என்பதால், சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி ஊழியர்களை மட்டுமே கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு கொண்டிருந்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், முழு அளவிலான பணியாளர்கள் அலுவலகங்களில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இனி 100 சதவிகித ஊழியர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது.

“ copy rights NavaIndia”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News: தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்?

பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? என்று பா. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Title:Tamil news today live chennai tamilnadu politics crime corona weather eps stalin indiawww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: