திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதில் என்ன பிரச்சினை ?


நாட்டில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களை மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக, திருவனந்தபுரம் விமான நிலையத்தை, அதானி நிறுவனத்திற்கு 50 ஆண்டுகளுக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு, கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதானி என்டர்பிரரைசஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்படுவது ஏன்?

திருவனந்தபுரம், அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ மங்களூரு, கவுகாத்தி உள்ளிட்ட நாட்டின் 6 விமான நிலையங்களை, மத்திய அரசு, பொது தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ், அதானி நிறுவனத்திற்கு குறிப்பிட்ட காலத்துக்கு குத்தகைக்கு வழங்க மத்திய அரசு, கடந்தாண்டு முடிவு எடுத்திருந்தது. இதற்கான ஏலம், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதானி என்டர்பிரைசஸ், ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், கேரளா ஸ்டேட் இண்டஸ்டிரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் (KSIDC), கொச்சி இன்டர்நேசனல் ஏர்போர்ட் லிமிடெட் மற்றும் ஜூரிச் ஏர்போர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், அதிக தொகைக்கு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ஏலம் எடுத்தது.
டெல்லி, மும்பத, ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், இந்த பொது – தனியார் பங்களிப்பு முறையிலேயே நவீனப்படுத்தப்பட்டு தற்போது உலகத்தரம் வாய்ந்தவையாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கண்ட 6 நகரங்களின் விமானநிலையங்களையும் மாற்றி, அதன்மூலமாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

திருவனந்தபுரம் விமானநிலையம், 2003ம் ஆண்டில் இருந்தே, கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மத்திய அரசு, திருவனந்தபுரம் விமானநிலையத்தை, தனியார் வசம் ஒப்படைக்க நினைத்தால், அதற்கு முன்பாக, கேரள அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அந்த ஆலோசனை குழுவில், தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தை, அதானி நிறுவனத்திற்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, திருவனந்தபுரம் விமானநிலையத்தை, அதானி நிறுவனத்திற்கு அளிப்பதாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஒருதலைப்பட்சமானது.இது கேரள மாநிலத்தின் வளர்ச்சி, மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை சுக்குநூறாக உடைத்துவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஏற்ப, எங்களால் அதானி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதில் சிரமம் உள்ளது. அதானி நிறுவனத்திற்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தை அளித்த முடிவை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று அதில் முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

பல்வேறுகட்ட ஆலோசனைகள், அதிகாரமிக்க செயலாளர்கள் குழுவின் பரிந்துரைகள், கேரள அரசின் ஒப்புதலோடுதான் இந்த முடிவை மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏல நடைமுறையில் கேரள அரசும், சிறப்பு அனுமதியுடன் பங்கேற்றிருந்தது. கேரள அரசுக்கு, கூடுதலாக முதல் மறுப்பு உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் வெற்றி பெற்ற அதானி நிறுவனத்தை விட கேரள நிறுவனத்தின் மதிப்பு 19.64 சதவீதம் குறைவாக இருந்ததாலேயே, அந்த ஏல உரிமை அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அடுத்து என்ன செய்யப்போகிறது?

மத்திய அரசின் இந்த முடிவிற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டது.
இதுதொடர்பான மனுவை, கேரள உயர்நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்திருந்த நிலையில், சிறப்பு மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விரு நீதிமன்றங்களும், இந்த திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. பின், இதுதொடர்பான உத்தரவை, கேரள நீதிமன்றமே பிறப்பிக்கலாம் என்று திருப்பியனுப்பியது.

பொது – தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ், திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி நிறுவனம் வளர்ச்சி, மேம்பாடு திட்டங்களை மேற்கொண்டு, அந்த குத்தகை காலம் முடிந்தபிறகு, மீண்டும் அது ஏர்போர்ட் அத்தாரிட்டியிடமே ஒப்படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: What is the row over the takeover of Thiruvananthapuram airport by Adani Group?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: