
News In Tamil Live : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலத்தில், இந்திய-அமெரிக்கா உறவு வலுப்பெற்றது என்றும் மீண்டும் பைடனுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தற்போது நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் துணை அதிபராகத் தேர்வாகியுள்ளார். இத்தகைய வெற்றியைத் தொடர்ந்து, தான் ஒரு முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம், ஆனால், கடைசி அல்ல என்றும் ஒரு பெண்ணை துணை அதிபராக நியமிக்க பைடனுக்கு துணிச்சல் அதிகம் என்றும் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணிப்பவர்களுக்கு, 72 மணி நேரத்திற்குள் ஆர்டி-பிசிஆர் நடத்தப்படும் சோதனையிலிருந்து கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பித்துத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நீக்கியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு வெளியிட்ட சர்வதேச வருகைக்கான புதிய வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக இது இணைந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய உச்சத்தை பதிவு செய்ததோடு ( 7,128 பாதிப்புகள்) மட்டுமல்லாமல், நான்கு மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக தேசத்தின் தினசரி கொரோனா பாதிப்பில் அதிகப்படியான பங்களிப்பை டெல்லி தலைநகர் பதிவு செய்தது.
“ copy rights NavaIndia”
Live Blog
Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Latest Tamil News Live :
தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க முற்பட்டஎல்.முருகன் உட்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை தமிழக காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், தங்களின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாராணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்கையும் கேட்ட நீதிபதிபதிகள், வழக்கை வரும் பத்தாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
Web Title:Tamil news live today america election joe biden kamal harris modi eps stalin vel yathirai
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center