தொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்!


By: WebDesk
October 29, 2020, 11:05:20 AM

சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

கதறி அழுத போட்டியாளர்கள்: பிக் பாஸில் என்ன நடந்தது?

செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், “தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில், தமிழகம் 60% மழையைப் பெறும். வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ. இந்தாண்டுக்கான மழை பதிவு சராசரியை ஒட்டியோ அல்லது சராசரியை விட அதிகமாகவோ இருக்கும்.

நெல்லை, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்றார்.

அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Tamil News Today Live: தமிழகத்துக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட்

இதனிடையே சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu weather forecast rain in chennai northeast monsoon





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: