தோனி இந்த ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த போராடுவது ஏன்?

தோனி இந்த ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த போராடுவது ஏன்?


இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக எம்.எஸ். தோனி தனது கடந்த காலத்தைவிட திறன் குறைந்து காணப்படுகிறார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் தோனி 10 போட்டிகளில் 164 ரன்கள் எடுத்துள்ளார். வெள்ளை பந்து கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஃபினிஷரான தோனி இப்போது ஆட்டங்களை முடிக்க சிரமப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

தோனியின் வலிமை வீழ்ச்சியடைகிறதா?

தோனியின் பேட்டிங் புள்ளிவிவரம்: டி20 போட்டிகளில் அவரது ஒரு நாள் அதிகபட்ச சராசரி (ஸ்ட்ரைக் ரேட்) 135.54 என்பது ஐபிஎல் தொடரில் ஸ்ட்ரைக் ரேட் 125.19-ஐ விட அதிகமாக உள்ளது. டி20 போட்டிகளில் 326 சிக்ஸர்கள் அடித்துள்ள தோனி ஐபிஎல் போட்டிகளில் 301 சிக்சர்களை அடித்துள்ளார்.

2008 – 2019ம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற 190 ஐபிஎல் போட்டிகளில், தோனி 209 சிக்ஸர்களை அடித்தார். அதாவது, ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக 1.1 சிக்ஸர்கள் என்ற அளவில் அடித்துள்ளார். 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அவர் நிறைய சிக்ஸர்கள் அடித்த ஆண்டாக இருந்தது. 16 போட்டிகளில் அதிகபட்சமாக 30 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் 15 போட்டிகளில் 23 சிக்ஸர்கள் அடித்தார். 10வது ஐபிஎல் போட்டிகளுடன் ஒப்பிடும்போது அவர் இந்த ஐபிஎல் போட்டிகளில் வெறும் 6 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். அவருடைய சிக்ஸ் அடிக்கிற சராசரி இந்த முறை ஒரு போட்டிக்கு 0.6 ஆக குறைந்துள்ளது.

தோனி தனது பேட்டிங்கை மறுவடிவமைத்துள்ளாரா, இல்லையா?

கடந்த மூன்று – நான்கு அனடுகளில் தனது இன்னிங்ஸ்களை கட்டி எழுப்புவதற்கு போராடி வருகிறார். கடந்த ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை போட்டியில் யில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து நெருக்கடியில் இருந்தபோது, ​​அவர் அந்த இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் என ஆட்டத்தை கொண்டுவந்து அவர் கடைசி வரை களத்தில் இருந்தார். ஹர்திக் பாண்ட்யா ஒரு அதிரடி ஆட்டக்காரராக பாவனை செய்தார். ஆனால், தோனி 91-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் மிகவும் நல்ல ஆட்டம். அதற்கு முன்னர், 2019ம் ஆண்டின் தொடக்கத்தில், அடிலெய்ட் மற்றும் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் முறையே 55 மற்றும் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்தியாவை வீட்டுக்கு செல்ல வழிகாட்டினார்.

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் தோனி 2 முறை ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக 36 பந்துகளில் 47 ரன்களும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தார். இந்த போட்டிகளில் சி.எஸ்.கே தோல்வியைத் தழுவினார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டத்தில், அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் அவர் 2 பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தோனி தனது மாயாஜாலத்தை மீண்டும் பெற போராடுவது ஏன்?

தோனி இந்த ஐபிஎல் தொடருக்கு முழுவதுமாக தேவையில்லாமல் வந்துவிட்டார். ஜூலை 10, 2019 அன்று ஓல்ட் டிராஃபோர்டில் நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியே அவரது கடைசி போட்டியாகும். கோவிட்-19 தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் நீண்ட ஓய்வுக்கு கட்டாயப்படுத்தியது. ஆனால், தோனியின் விஷயத்தில் இடைவெளி இன்னும் நீண்டது. மேலும், அவர் 39 வயதில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கருத்துப்படி, போதிய ஆட்ட நேரம் இல்லாதது தோனியின் உடற்தகுதியை பாதித்துள்ளது. “தோனி நீண்ட கால ஓய்வுக்குப் பிறகு இந்த ஐ.பி.எல். தொடருக்கு விளையாட வந்துள்ளார். இந்த ஐ.பி.எல்-லில் அவருக்கு விளையாடுவதற்கு ஆட்ட நேரமும் வரவில்லை. அதனால், இங்கே பிரச்சினை உள்ளது. இதுபோன்ற நீண்ட ஓய்வுக்குப் பிறகு வருவதும் போட்டியில் வலிமையுடன் மாறுவதும், மீண்டும் ஃபார்முக்கு செல்வதும் எளிதல்ல. தோனியின் வயதில் ஒரு வீரருக்கு, இது இன்னும் கடினமாகிறது. தோனி தன்னை வலிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பாகிஸ்தான் பேட்டிங் ஜாம்பவான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

விளையாடுவதற்கான நேரக் குறைவு தோனியின் பேட்டிங் எவ்வாறு பாதிக்கிறது?

அவர் தனது நேரத்தை சரியாகப் அடையவில்லை. அவரது இயல்பான மெதுவாக உள்ளது. “இந்த ஐபிஎல்லில் தோனியின் பேட்டிங்கை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, சிக்கலான பகுதிகள் அவரது நேரம் மற்றும் இயக்கம். ஒரு வீரர் முற்றிலும் பொருந்தவில்லை என்றால், அவரது நேரம் மற்றும் இயக்கம் மெதுவாக இருக்கும்” என்று மியாண்டாட் விரிவாகக் கூறினார். மேலும், அவரைப் பொறுத்தவரை, சில நேரங்களில் தோனியின் “உடல் நிலைகள் சரியாக இல்லை” என்று கூறினார்.

ஏபி டிவில்லியர்ஸ், 36 வயதில், இந்த போட்டியில் 190 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எப்படி செல்கிறார்?

டிவில்லியர்ஸும் 30 வயதில் தவறான பக்கத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கான போட்டிகளில் வெற்றி பெறுகிறார். இதில் வேறுபாடு என்னவென்றால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், பிக் பாஷ் போன்ற வெவ்வேறு டி20 லீக்குகளில் டிவில்லியர்ஸ் இன்னும் வழக்கமாக விளையாடி வருகிறார். மேலும், ஒரு பேட்ஸ்மேனாக டிவில்லியர்ஸ் தோனியை விட பெரிய சிக்சர்களைக் கொண்டுள்ளார். டி வில்லியர்ஸ் பந்தை இடைவெளிகளின் வழியாக அடிப்பதில் அதிக சுதந்திரத்தை இது அனுமதிக்கிறது. பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிப்பது பந்தை நன்றாக சரியான நேரத்தில் அடிப்பது ஆகியவை இடைவெளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் திறனைப் பற்றியது. ஒரு பேட்ஸ்மேனாக, பந்தை சரியாக அடிக்க நீங்கள் வரம்பைக் கொண்டிருக்க வேண்டும்” என்று மியாண்டாட் சுட்டிக்காட்டினார்.

தோனி பந்தை சரியான நேரத்தில் அடிப்பதற்கு சிரமப்படுகிறாரா?

சி.எஸ்.கே மற்றும் ஆர்.ஆர் இடையேயான ரிட்டர்ன்-லெக் போட்டியின் போது, ​​நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி தோனிக்கு ஒரு புல் டாஸ் பந்து வீசினார். தோனி ஏற்கனவே 25 பந்துகளை விளையாடியுள்ளார். களத்தில் நன்கு நிலைத்திருந்தார். அவர் அதை தட்டிவிட முயற்சித்தார். அதற்கு காரணம் அந்த பந்தை அவர் தவறாகப் புரிந்து கொண்டார். மேலும், பந்து நீண்ட தொலைவிற்கு சென்றது.

தோனி பேட்டிங்கில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப முடியுமா?

39 வயதில், அவர் அதைச் செய்ய பல வருடங்கள் ஆகும். இருப்பினும், தோனி அதிக வலிமையாக இருக்கும்போது அவர் சிறப்பாக வருவார் என்று மியாண்டாட் நம்பினார். “அவருக்கு எனது பரிந்துரை என்னவென்றால், அவரது உடற்பயிற்சி பயிற்சிகளையும் வலைகளில் பேட்டிங் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். அவர் 20 சிட்-அப்களைச் செய்கிறார் என்றால் (உதாரணமாக), அவர் அதை 30 ஆக உயர்த்தலாம். அவர் ஐந்து ஸ்ப்ரிண்ட்களைச் செய்கிறார் என்றால், அதை எட்டாக அதிகரிக்க முடியும். அவர் பேட்டிங் பயிற்சிக்காக ஒரு மணி நேரம் வலைகளில் செலவிடுகிறார் என்றால், அவர் அதை 2 மணி நேரமாக அதிகரிக்க முடியும். நீங்கள் அதை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அதை பகுதிகளாக செய்யலாம். காலை, பிற்பகல் மற்றும் மாலை என மூன்று அமர்வுகளில் நீங்கள் இதைச் செய்யலாம். தோனிக்கு இது தெரியும், ஒருவேளை, அவர் ஏற்கனவே அதைச் செய்துகொண்டிருக்கலாம்”என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: