நீங்க போய் அலைய வேண்டாம். வீடு தேடி வரும் கடன் திட்டம் வெறும் 45 நிமிடத்தில்!

நீங்க போய் அலைய வேண்டாம். வீடு தேடி வரும் கடன் திட்டம் வெறும் 45 நிமிடத்தில்!


By: WebDesk
October 22, 2020, 2:28:03 PM

Emergency Loan sbi : மக்களின் அவசரக் கால பணத் தேவையைக் கருத்தில் கொண்டு, SBI Emergency Loan Scheme என்ற கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வெறும் 45 நிமிடங்களில் ரூ.5 லட்சம் வரையில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இக்கடனுக்கான மாதத் தவணையை ஆறு மாதங்கள் கழித்துச் செலுத்தத் தொடங்கலாம் என்று சலுகையை எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி இருக்கும் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எஸ்பிஐ வழங்கும் இந்த அவசர காலக் கடன் திட்டத்துக்கான வட்டி விகிதம் 10.5 சதவீதமாகும். இது மற்ற தனிநபர் கடன்களை விடவும் வட்டி குறைவுதான். இக்கடன் வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் (YONO App) மூலமாகவும் விண்ணப்பம் செய்து பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்துகொண்டே வெறும் 45 நிமிடங்களில் இந்தக் கடனைப் பெற முடியும். இக்கடனைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்குத் தகுதி உள்ளதா என்பதைக் கண்டறிய, அவர்களது மொபைல் எண்ணில் இருந்து ’567676’ என்ற எண்ணுக்கு PAPL என்று டைப் செய்து, எஸ்பிஐ வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

எஸ்பிஐ வங்கியின் இந்த அவசரக் காலக் கடனைப் பெறுவதற்கு YONO App மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போனில் YONO SBI App பதிவிறக்கவும் செய்து, அதில் Pre-approved Loan என்ற வசதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் எவ்வளவு கடன் தேவை, அதனை எவ்வளவு காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ வங்கியிடமிருந்து OTP எண் வரும். அதைப் பதிவு செய்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட கடன் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த திட்டம் குறிப்பிட்ட கால மு்றைக்கு மட்டும் வங்கியிடம் கூடுதல் விவரங்கள் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Emergency loan sbi state bank emergency loan state bank of india netbanking sbi

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: