நீச்சல் பாதுக்கப்பானதா? மீண்டும் அனுமதிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன?


நிலத்தில் கடுமையான சமூக விலகல் நெறிமுறையை அமல்படுத்த முடியாததால், அதிகாரிகள் வீரர்களுக்கான நீச்சல் வளாகங்களைத் திறக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

நீச்சல் பாதுகாப்பானதா?

நீச்சல் குளங்களில் குளோரின்
கலக்கப்பட்டிருப்பதால் அது பாதுக்கப்பானது  என்று எடுத்துக் கொள்ளலாம். எவ்வாறாயினும், அநேக நீச்சல் குளங்களில்,சமூக விலகல் நெறிமுறைகள் செயல்படுத்து வதில்லை. எய்ம்ஸ் சமூக மருத்துவ துறையின் முன்னாள்  தலைவர்  டாக்டர் சந்திரகாந்த் பாண்டவ் கூறுகையில், “வைரஸ் தண்ணீரில் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மூச்சுக் குழாய், கண்கள் மற்றும் வாயின் வழியே இந்த வைரஸ் நுழைகிறது. மேலும்,100%  சமூக விலகல் நெறிமுறையை 100% அமல்படுத்துவது கடினம் என்பதால், நீச்சல் குளங்களை தவிர்ப்பது நல்லது” என்று தெரிவித்தார்.

குளோரின் நீச்சல் வளகாத்தை பாதுகாக்க முடியுமா?

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட  நெறிமுறைகளில், நன்கு பராமரிக்கப்பட்ட, ஒழுங்காக குளோரினேட்டட்    நீச்சல் வளாகம் பாதுகாப்பானது. யு.எஸ்.ஏ, ஸ்விமிங் (USA Swimming) நிர்வாகக்குழு , நீச்சல் வளாகங்களில் 2.0 பிபிஎம் குளோரின் கட்டாயம் இருக்க வேண்டும்  என்று தெரிவித்தது. அந்த அளவு குளோரின் கொரோனா வைரஸ்  கொல்லும். இருப்பினும், 3 பிபிஎம் குளோரின் என்ற அனுமதிக்கப்பட்ட  குளோரின் அளவு இருந்தால் சருமத்திலும்,கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தும்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

வேறு என்ன நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன?

அமெரிக்க அரசு வெளியிட்ட நெறிமுறைகளில்,”சிறிய நீச்சல் வளாகத்தில் (25-கெஜம் தூரம்) அதிகபட்சமாக 27 பேரும், ஒலிம்பிக் அளவிலான 50 கெஜம் தூரம் கொண்ட நீச்சல் வளாகத்தில் 60 பேர் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது . ஒவ்வொரு நீச்சல் வழித்தடமும்  8 அடி அகலம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது

இங்கிலாந்து தனது நீச்சல் வளாகங்களை திறக்கும்போது, ” நீச்சல் வளாகத்த்ரிகுள் அனைவரும் கடிகார திசையை  நோக்கி நீச்சலடிக்க வேண்டும். சமூக விலகல் நெறிமுறையை கடைபிடிக்கும் பொருத்து இரண்டு வழித் தடங்கல் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் காணப்படுபவர்களை  தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒரு நீச்சல் வழித் தடங்களில் ஒருவர் மட்டுமே நீச்சலடிக்குமாறு ஆஸ்திரேலிய வழிகாட்டுதல்கள்  குறிப்பிடுகின்றன; வெப்பநிலை சோதனைகளை இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக்கியது.

இந்தியாவில் நீச்சல் மீண்டும் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

நிலையான இயக்க நெறிமுறைகளைத் ( SOP) தயாரிப்பதற்கான பரிந்துரைகளைக் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (SAI) கேட்டிருந்தாலும், நீச்சல் வளாகங்கள் செயப்பட அனுமதிப்பது குறித்த இறுதி முடிவு மாநில அரசு நிர்வாக வரம்பில் உள்ளது  . நான்காவது அனலாக் காலகட்டத்திற்கு முன்பு நீச்சல் வளாகங்கள் திறக்கப்படாது என்று நீச்சல் வீரர்கள் கருதுகின்றனர்  (ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்ட அன்லாக் 2.0-ல் நீச்சல் வளாகங்கள் மூடப்பதுவதாக மத்திய அரசு தெரிவித்தது).

நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால், பயிற்சியாளர்கள், துப்புரவாளர்கள், உயிர் காக்கும் நீச்சல் வீரர்கள் என  அனைவரும் தங்கள் மாதவருமானத்திற்காக போராடுகின்றனர். பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்வதற்கு தேவையான அளவிற்கு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டு, போட்டிக்குத் தயாராகும் நீச்சல் வீரர்களுக்கு அதிக  முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

 என்ன தயங்கம்?  

இந்திய விளையாட்டு ஆணையமும் (SAI) விளையாட்டு அமைச்சகமும் எதையும் தெளிவுபடுத்தவில்லை. சில  அடிப்படை உத்தரவாதம் இல்லாமல் பயிற்சியைத் தொடங்குவது குறித்து தங்களிடம் தயக்கம் இருந்து வருவதாகவும், வெளிநாடுகளில் பயிற்சி பெற விரும்புவதாகவும் சில நீச்சல் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலை நாடுகளில் அனுபவம் வாய்ந்தவர்களால் விதிமுறைகள் வரையப்படுகின்றன என்றும் அவர்கள் கருதுகின்றனர். கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு நிறுவனத்துடன் இந்திய விளையாட்டு ஆணையம் ஒரு புரிந்துணர்வு  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் நீச்சல் வீரர்களுக்கு அந்த விருப்பத்தை ஆராயலாம். இருப்பினும், அன்றாட  மக்களுக்கான நீச்சல் வளாகங்களை மீண்டும் திறப்பதற்கு யாரும் தயாராக இல்லை.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் துறைத் தலைவர் (விளையாட்டு மருத்துவம்) டாக்டர் அசோக் அஹுஜா,” தற்சமயம் , நீச்சல் வளாகங்களை மீண்டும் திறப்பது மோசமான யோசனை” என்று தெரிவித்தார். குளங்கள் பாதுகாப்பானவை என்று நான் நினைக்கவில்லை. குளோரினால் கிருமி நீக்கம் செய்யப்பட்ட போதிலும்,  இந்த புதிய வைரசின் வீரியம் இன்று வரை   நிரூபிக்கப்படவில்லை..… பொது மக்கள் நீச்சல் போன்ற செயல் பாடுகளுக்கு டிசம்பர் வரை காத்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: