பாஜக தொண்டர்களைப் பார்த்து காரை விட்டு இறங்கிய அமித்ஷா


By: WebDesk
Nov 21, 2020, 2:12:10 PM

Amit Sha News Live Updates: பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.

மாலை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில், ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அவர், கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அவர், அங்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 2021 தேர்தல் குறித்த முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Home Minister Amit Shah Chennai Visit Live

உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த இணைப்பில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். 

Tamil News: விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். அதோடு விழாவில் பேருரையும் ஆற்றுகிறார்.

Web Title:Amit sha news live home minister and bjp leader amit shah chennai visit



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: