பார்வையில காந்தம் இந்த பாண்டிச்சேரி பொண்ணுக்கு: சுபலட்சுமி ரங்கன்


By: WebDesk
Updated: August 26, 2020, 08:00:43 PM

Tamil Serial News, Serial Artist Subalakshmi Rangan: மற்ற சீரியல் நடிகைகளைப் போலவே சுபலட்சுமி ரங்கனும் கோதாவில் குதித்துள்ளார். அதாவது தனது வித விதமான படங்களை இணையத்தில் உலவ விட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். தனக்குப் பிடித்தமான மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து அதன் மூலம் ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அது இவரது வீட்டிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். ஆனால் ரொம்பவும் பிடிவாதம் பிடித்தாராம். இருப்பினும் டாக்டர் ஆவது தான் சுபலட்சுமியின் ஆசையாக இருந்ததாம்.

அது நிறைவேறாத காரணத்தினால் இன்னொரு ஆசையான நடிகையாகும் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தீவிர முயற்சி எடுத்திருக்கிறார். முதலில் வீட்டில் இருந்தவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லையாம். பின்னர் நடிக்க ஆரம்பித்த பிறகு முழு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். சுபலட்சுமி நடிக்க போகும் இடங்களுக்கெல்லாம் அவரது அப்பா துணைக்கு சென்று விடுவாராம்.

மாடலிங்கில் நடித்துக்கொண்டிருக்கும் போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி குறும்படங்களிலும் நடித்துள்ளார் சுபலட்சுமி. அதில் அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து, இரண்டு திரைப்படங்களிலும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் சீரியல்களில் தன் கவனத்தை செலுத்த தொடங்கியிருக்கிறார் சுபா.

முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’அழகிய தமிழ் மகள்’ சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வில்லத்தனத்தை முழுமையாக தனது கண்களாலேயே காட்டி விடுவது சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்.
தற்போது இவர் கண்மணி சீரியலில் ஒரு நடிகையாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முன்பு பப்ளியாக இருந்த சுபலட்சுமி தற்போது உடல் எடையைக் குறைத்து சிக்கென மாறியுள்ளார்.

அடுத்த வாய்ப்பிற்காக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news serial artist subalakshmi rangan sun tv zee tamil

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: